Thursday, October 24, 2013

இன்னும் உமக்குத் தெரியவில்லையா?


பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, 'எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?' என்றனர். மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, 'போங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர்கள் யார் யார்?' என்று கேட்டான். (விடுதலைப்பயணம் 10:7-8)

எகிப்தில் யாவே இறைவன் அனுப்பிய கொள்ளை நோய்களுக்கெல்லாம் பார்வோன் பயந்தானோ இல்லையோ ஆனால் அவரின் உடனிருப்போர் பயந்துவிட்டனர். 'எகிப்து அழிவதை' நினைவூட்டுகிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்பது போலத் தெரிந்தாலும் பார்வோன் யார் வார்த்தைகளுக்கும் செவிகொடுக்க மறுக்கின்றான். கடவுள் அனுப்பும் இறுதிக் கொள்ளை நோய்க்கே பயப்படுகின்றான்.

நமக்கருகில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்கலாமா? வேண்டாமா? என்ற கவலை நம் அனைவருக்குமே இருக்கின்றது. ஜோ-ஹேரி என்ற உளவியல் அறிஞர்கள் தங்களின் ஜன்னல் மனஆய்வுக்குப் பெயர்பெற்றவர்கள். 'நம் கண்களுக்கு' மறைவாய் இருப்பவை மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகின்றன. மற்றவர்கள் நம்மிடம் சொல்பவை நம்மைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கின்றன.

அடுத்தவர்கள் நம்மிடம் நம்மைப் பற்றிச் சொன்னால் கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அடுத்தவர்கள் அடுத்தவர்களைப் பற்றிச் சொன்னால் நாம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும்: 'is it true? is it necessary? is it kind?' 

அடுத்தவர்கள் நம் நிழல்கள். நமக்குத் தெரியாதவைகளை அடுத்தவர்கள் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வழியாகவும் இறைவன் பேச முடியும். அவர்களின் குரல் இறைவனின் குரல்.

'இன்னும் உமக்குத் தெரியவில்லையா?'

1 comment:

  1. Anonymous10/25/2013

    சரியாகச்சொன்னீர்கள் கண்ணா.நம்மைப்பற்றி நமக்குத்தெரியாத பல விஷயங்கள மற்றவர்களுக்குத் தெரியலாம்.அந்த மற்றவர்கள் நம்மீது அக்கறை யுள்ளவ ர்களானால அவர்கள் குரலை இறைவன் குரலாக எடுக்கலாம்...எடுக்க வேண்டும்.
    ஆமா...'ஜன்னல் மனஆய்வு' என்றால் என்ன கண்ணா? காலை வணக்கங்களுடன..........

    ReplyDelete