பின்பு யாக்கோபு முதலில் போகிறவனை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: 'என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு, 'நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்? உனக்கு முன் செல்லும் இவை யாருடையவை?' என்று உன்னிடம் கேட்டால், 'இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை. அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அவரும் எங்கள் பி;ன்னர் வருகிறார்' என்று நீ சொல்வாய்' என்றார். (தொடக்கநூல் 32:17-18)
யாக்கோபின் பயணம் தொடர்கிறது. தன் தாய்மாமன் லாபான் விரட்டி வர, அவரிடம் ஒரு வழியாகச் சமரசம் செய்து, உடன்படிக்கை ஏற்படுத்தி எல்லாம் சரியாகி விட, இப்போது மற்றொரு பிரச்சனை – ஏசா. ஏசா தன்னைத் தேடி வருவதைக் கேள்வியுற்ற யாக்கோபு அவரை எதிர்கொள்ளத் தேடும் முயற்சியே இன்றைய நம் சிந்தனைப் பகுதி.
யாக்கோபு இந்த இடத்தில் ஒரு மாமனிதராகவே தோன்றுகின்றார். தான் ஒரு பாதையில் செல்கின்றார். அந்த வாழ்க்கைப் பாதையிலிருந்து அவர் திரும்பும்போது எல்லாவற்றையும் சரிசெய்து கொண்டே வருகின்றார். நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போதும், தடைகள் வரும்போதும் துவண்டுவிடத் தேவையில்லை. நாம் சரி செய்து கொள்ள முடியும். பென்சிலின் முனையில் இரப்பர் இருப்பது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கே என்ற உண்மையைக் கற்றுக்கொண்டவர் யாக்கோபு. இதுதான் யாக்கோபு நமக்கு வைக்கும் முதல் பாடம்.
இரண்டாவதாக, பிரச்சினைகள் நம் வாழ்வில் வரும்போது நாம் எடுக்கும் முயற்சிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: 1) Fighting. அதனுடன் சண்டையிடுவது, 2) Flying. அதிலிருந்து தப்பி ஓடுவது, 3) Facing. அதை எதிர்கொள்வது. யாக்கோபின் அணுகுமுறை மூன்றாவது வகையானது. அதுவே சரியானது. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது போல, நமக்கு எது வந்தாலும் அதற்கு நாம் தான் காரணம். அப்படியென்றால் அதை நாம்தானே சரி செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, ஏசாவின் தாராள உள்ளம். சகோதர உறவிற்கு நல்ல எடுத்துக்காட்டு ஏசா. என்னதான் தன் சகோதரன் தன் தலைமகன் உரிமையை எடுத்துக்கொண்டாலும், தன் ஆசியையும் ஏமாற்றிப் பறித்துக்கொண்டாலும் ஒருதுளி கூட கோபத்தைக் காட்டவில்லை. ஆரத்தழுவிக்கொள்கின்றார் தன் தம்பியை. 'என்ன இருந்தாலும் நீ என் தம்பிடா! என்று தாராள உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். சகோதரன் என்ற வார்த்தை சொல்வதும் இதுதான்: 'சக உதரம்'. அன்று தாயின் ஒரே உதரத்தில் இருந்தோம், இன்று பூமித்தாயின் ஒரே உதரத்தில் இருக்கின்றோம் என்ற உண்மையை அறிந்து கொண்டவர் ஏசா. ஒரு காலத்தில் யாக்கோபைக் கொல்லத் தேடிய ஏசா ஏன் இன்று இப்படி மாறிப்போனார்? அவரின் காயத்தை மாற்றியது எது? காலம் காயத்தை ஆற்றியதா? அன்பு காயத்தை ஆற்றியதா? 'எல்லாம் கடந்து போகும்' என்ற உண்மை அறிந்து கொண்டாரா?
'நீ யாருடைய ஆள்?'
'நீ எங்கே போகிறாய்?'
'உனக்கு முன் செல்லும் இவை யாருடையவை?'
'நீ எங்கே போகிறாய்?'
'உனக்கு முன் செல்லும் இவை யாருடையவை?'
இன்றைய பகுதி அருமையிலும் அருமை.சகோதரன் என்ற வார்த்தைக்கு விளக்கம. சொல்லியுள்ள விதம. புலலரிக்கச செய்து விட்டஉது.ஆசிரியருக்கு பாராட்டடுக்கள்.
ReplyDeleteஇன்றைய பகுதி அருமையிலும் அருமை. சசோதரன் என்ற சொல்லுக்கு கொடுத்துள்ள விளக்கம புல்லரிக்கச்செய்து விட்டது.ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.நன்றி.
ReplyDeleteஎப்படி கண்ணா உன்னால் மட்டும் இபபடி எல்லாம் யோசிக்க. முடியுது? ரொம்ப. ரொம்ப. பெருமையா இருக்கு.தொடரட்டும் உஙகள் பணி.
ReplyDeleteஎப்படி கணணா உன்னால் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க. முடியுது? ரொம்ப. ரொம்ப பெருமையா இருக்கு.தொடரட்டும் உஙகள் பணி.
ReplyDelete