Saturday, October 12, 2013

அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?


மீண்டும் யோசேப்பு 'கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்' என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர். (தொடக்கநூல் 50:25-26)

இன்றைக்குக் கேள்விக்குப் பதில் ஒரு ஸ்டேட்மண்ட்.

'கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்!'

இதுதான் யோசேப்பின் இறுதி வார்த்தைகள். யோசேப்பின் வார்த்தைகள் மட்டுமல்ல. இவையேதான் தொடக்கநூலின் இறுதி வார்த்தைகளும் இவைதான். யோசேப்பு இந்த வார்த்தைகளை இறைவாக்காகச் சொல்லிவிட்டுப் போகின்றார். இது இறுதியாக இயேசுவின் வருகையைச் சுட்டிக் காட்டுகிறது. 

கடவுள் உங்களைச் சந்திக்க உறுதியாக வருவார். இஸ்ராயேல் மக்களின் உச்சகட்ட நம்பிக்கை இது. யாராவது நம்மைச் சந்திக்க வருகிறார்கள் என்றால் நம்மிடம் உள்ளது ஒரு எதிர்பார்ப்பு, ஆர்வம், தயாரிப்பு. 

இந்த மூன்றும் இருக்கும்போதுதான் நம் சந்திப்பு பலன்தரும்.

படைப்பின் தொடக்கத்தில், பிதாப்பிதாக்களின் வாழ்வில் மனிதர்களைச் சந்திக்க வந்த கடவுள் இன்றும் நம்மைச் சந்திக்க வருகின்றார்.

இந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும் நம் வாழ்விலும் இருக்கட்டும்.

கீதாஞ்சலியின் இனிய வார்த்தைகளோடு நாம் தொடக்கநூலை நிறைவு செய்வோம்:

'நீங்கள் அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?

அவர் வருகிறார். அவர் தினமும் வருகிறார்.

குழந்தையின் சிரிப்பில்.

எளியவரின் நம்பிக்கையில்.

உழைப்பாளியின் வியர்வையில்.

அவரின் காலடி ஓசைகள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

நீங்கள் அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?'

'கடவுள் உங்களைச் சந்திக்க வருவார்!'

1 comment:

  1. Anonymous10/12/2013

    ஏழையின் சிரிப்பிலும் எளியவரின் நம்பிக்கையிலும் நம்மைக்காண தேடி வரும்இறைவன் நமக்கு நல்வாக்குரைக்கும் நல் உள்ளங்களின் வழியாகவும் ஐ?வருகிறார்.தொடக்கநூலை அழகாக, ஆணிததரமாக எங்கள் இல்லங்களுக்கும்உள்ளங்களுக்கும் கொண்டு வந்த கண்ணாவை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கடடும்.

    ReplyDelete