Tuesday, July 14, 2020

ஆண்டவரின் கருவி

இன்றைய (15 ஜூலை 2020) முதல் வாசகம் (எசாயா 10:5-7,13-16)

ஆண்டவரின் கருவி

புனித இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகள் நூலின் ஒரு பகுதியில், 'கடவுள் பயன்படுத்தும் மருத்துவர் கத்தி' ('surgeon's knife') என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். மருத்துவரின் கத்தி அடுத்தவரை வெட்டிக் காயப்படுத்தும். ஆனால், அப்படி அந்தக் கத்தி வெட்டிக் காயத்தை ஏற்படுத்தினால்தான் மற்றவர் நலம் பெறுவார். ஆக, மருத்துவரின் கத்தி தரும் வலி எப்போதுமே நலமானது. சிறிது நேர துன்பத்தை அது தந்தாலும், நீண்ட நலனை அது பின்நாளில் ஒருவருக்குத் தரும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மருத்துவர் கத்தியாக அசீரியா நாடு இருக்கிறது. தன்னுடைய சொந்த இஸ்ரயேல் மக்களின் தவறுகளைக் கண்டிக்க, ஆண்டவராகிய கடவுள், அசீரியாவை மருத்துவர் கத்தியாகப் பயன்படுத்துகின்றார். ஆண்டவர் கொடுக்கும் மருந்து நோயைவிடக் கசப்பானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.

ஆனால், அதே மருத்துவர் கத்தி, கொலை செய்யும் கத்தியாக மாறியபோது, ஆண்டவர் தன் மக்களைக் காப்பாற்ற இறங்கி வருகின்றார்.

இவ்வாறாக, 'கொல்வதும் நானே, உயிர்தருவதும் நானே' என்று தன்னை எல்லாம் வல்ல இறைவனாகக் காட்டுகின்றார்.

இதுவே மறைபொருள்.

எல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:25-27), விண்ணரசின் மறைபொருள் குழந்தைகளுக்கு (சீடர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டது பற்றி மகிழ்கின்றார் இயேசு. வாழ்வில் நமக்கு நடப்பவை அனைத்திற்குமான பொருளை அறிந்திருப்பவர் இறைவனே. அவற்றை நாம் நம் அறிவால் அல்ல, அவருடைய வெளிப்பாட்டலே அறிந்துகொள்ள முடியும்.

நமக்குத் தேவையான மனநிலை என்ன?

குழந்தைகளைப் போல, நம் கைகளை விரித்து அவரிடம் நீட்டுவது.

2 comments:

  1. Great is the human ,who has not lost his child-like heart...👍

    ஆண்டவர் தன் மக்களை,காப்பாற்ற
    இறங்கி வருகின்றார்.🤝

    ReplyDelete
  2. “அடிக்கிற கைதான் அணைக்கும்”....இது தாயுள்ளம்.” கொல்வதும் நானே! உயிர் தருவதும் தருபவரும் நானே!....இது தாயுமானவரின் உள்ளம்.
    முக்காலமும் அறிந்த இறைவனின் வெளிப்பாட்டைக் குழந்தைகளைப்போல நம் கைகளை விரித்து அவரிடம் நீட்டுவது ஒன்றே எனக்கு இப்போதைக்குத் தேவையான மனநிலை.என் இப்போதைய மனநிலைக்குத் தேவையானதொரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete