Tuesday, July 3, 2018

அகலுமாறு வேண்டினர்

நாளைய (04 ஜூலை 2018) நற்செய்தி (மத் 8:28-34)

அகலுமாறு வேண்டினர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேய்களை பன்றிக்கூட்டத்திற்குள் ஓட்டும் நிகழ்வையும், அதன் விளைவாக கதரேனர் இயேசுவை தங்கள் ஊரைவிட்டு அகலுமாறு வேண்டுவதையும் வாசிக்கக் கேட்கின்றோம்.

இந்த ஊர் மக்களின் செயல் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன்?

தங்கள் ஊரில் தங்கள் நடுவில் வாழ்ந்த 2 பேய் பிடித்தவர்கள் தங்களுக்கு மிகவும் அச்சம் தந்தனர். அவர்கள் இருந்த வழியே செல்வதற்குக் கூட மக்கள் அஞ்சினர். இப்படியாக அச்சம் தரும் பேய்களை நீக்கி தங்கள் உறவான, நட்பான அந்த இருவர் நலம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர்கள் இயேசுவை ஊரைவிட்டு போகச் சொன்னார்களா?

அல்லது தங்கள் பன்றிக்கூட்டம் கடலில் வீழ்ந்து மடிந்துவிட்டது என்பதற்காக போகச் சொன்னார்களா?

தங்கள் ஊரில் இருவர் நலம்பெற்றதை விட பன்றிக்கூட்டம் அவர்களுக்குப் பெரியதாகத் தெரிந்ததா?

இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

பன்றிகளா? மனிதர்களா? என்று அவர்கள் தராசில் வைத்தபோது பன்றிகள் தாம் கனமாகத் தெரிந்திருக்கின்றன.

பன்றிகள் தீட்டின் உருவகம். ஆக, தங்கள் ஊரைப் பிடித்திருந்த தீட்டும், தங்கள் ஊர் மக்களைப் பிடித்திருந்த பேயும் அகன்றது என்று மகிழ்ந்து இயேசுவைக் கொண்டாடாத மக்கள் அவரைத் தங்களைவிட்டு நீங்குமாறு வேண்டுகின்றன்றனர்.

சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் தீமையோடும், அழுக்கோடும் வாழ்ந்து பழகிவிடுவதால் அதை நாம் எடுப்பதற்குப் பதிலாக அதை எடுக்க வருகின்ற கடவுளின் கரத்தைப் பிடித்துத் தள்ளிவிடுகின்றோம்.

அச்சத்தால் வாழ்ந்தால் பரவாயில்லை. அச்சமின்றி வாழ்தல் தான் அச்சமாக இருக்கிறது கதரேனருக்கும். நமக்கும்.

1 comment:

  1. " கனியிருக்கக் காயையே"சுவைத்துப்பழக்கப்பட்ட மக்கள் மனிதரைவிடப் பன்றிகளை கனமாகக் கண்டதில் வியப்பில்லைதான்."தீட்டுக்கும்,பேய்க்கும் அடிமையாகிப் போன அறிவிலிகள் இயேசுவை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்." "சில நேரங்களில் நாம் தீமையோடும்,அழுக்கோடும் வாழ்ந்து பழகிவிடுவதால் அதை நாம் எடுப்பதற்குப்பதிலாக,அதை எடுக்க வருகின்ற கடவுளின் கரத்தைப்பிடித்துத் தள்ளி விடுகிறோம்." எத்தனை உண்மையான வார்த்தைகள்! " அச்சத்தால் வாழ்ந்தால் பரவாயில்லை; அச்சமின்றி வாழ்தல்தான் அச்சமாக இருக்கிறது நமக்கு." வியக்கிறேன் தந்தையைப்பார்த்து.எல்லா விஷயங்களையும் இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்க்க இவரால் மட்டும் எப்படி முடிகிறதென்று! இவரது வரிகளை அப்படியே உள் வாங்கிக்கொள்வதை விட வேறு வழி தெரியவில்லை. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete