Wednesday, July 25, 2018

நீங்கள் - அவர்கள்

நாளைய (26 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:10-17)

நீங்கள் - அவர்கள்

நாளைய நற்செய்தியில் தன் சீடர்களோடு உரையாடும் இயேசு, 'நீங்கள்,' 'அவர்கள்' என இரண்டு குழுக்களைப் பற்றிப் பேசுகிறார். இங்கே 'நீங்கள்' என்பது நேரடியாக இயேசுவின் முன் உள்ள சீடர்களையும், 'அவர்கள்' என்பது மற்றவர்களையும் குறிப்பிடுகிறது. 'நீங்கள் பேறுபெற்றவர்கள். உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. உங்கள் கண்கள், காதுகள் பேறுபெற்றவை' எனக் குறிப்பிடும் இயேசு, 'அவர்களுக்குக் கொடுத்துiவைக்கவில்லை. அவர்கள் கண்ணிருந்தும் காணவில்லை, காதுகளிலிருந்தும் கேட்கவில்லை' எனச் சாடுகின்றார்.

இன்று நம்முன் உள்ள கேள்வியும் இதுதான்: 'நாம் எந்தக் குழுவைச் சார்ந்தவர்கள்?' 'நம்மை அவர் நீங்கள் என்பாரா அல்லது அவர்கள் என்பாரா?'

1 comment:

  1. இயேசுவின் முன்னால் இருக்கும் ஒருவர் "பேறுபெற்றவராக" இருக்க அவர்கள் கண்கள் காண வேண்டும்; காதுகள் கேட்க வேண்டும் என்கிறது இன்றைய பதிவு. ஏன் உடலளவில் கூட இருக்கலாமே..... காதுகளையும்,கண்களையும் பயன்படுத்த விரும்பாமல்.அதே போல் இயேசுவை விட்டு உடலளவில் தள்ளி இருப்பதாலேயே ஒருவர் தன் கண்களையும்,காதுகளையும் பயன்படுத்த மாட்டாரென சொல்ல முடியாது.ஆகவே ஒருவர் "பேறுபெற்றவராக" இருப்பது அவர் இருக்கும் இடத்தைப்பொறுத்தல்ல; இருக்கும் வித்த்தைப் பொறுத்தே என்பது என் கணிப்பு.ஆனால் இது இயேசுவின் சமகாலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.நாம் எப்படிப்பார்ப்பது எனத் தெரியவில்லை.ஆனால் " நீங்கள்" குழுவைச்சேர்ந்தாலும்," அவர்கள் " குழுவைச்சேர்ந்தாலும் " பேறுபெற்றவளாக" இருக்கவே விழைகிறேன்.கொஞ்சம் குழப்புகிற விஷயமே! ஆனால் நம் தெளிவே நம்மைக்காக்கும்.கேள்விகளை எழுப்பி பதில் தேட வைக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete