Sunday, July 22, 2018

அடையாளம் வேண்டும்

நாளைய (23 ஜூலை 2018) நற்செய்தி (மத் 12:38-42)

அடையாளம் வேண்டும்

'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்' என்று ஒரு குழுவினர் இயேசுவிடம் வருகின்றனர்.

மோசே காலம் முதல் அடையாளம் கேட்டே பழகியவர்கள் இன்றும் கேட்கிறார்கள் என்று உடனடியாக எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், இன்று நம் மூளையும் அடையாளம் கேட்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக 'நற்கருணையில் இயேசு தெரிகிறார்' என்ற செய்தியும், படங்களும் கட்செவி அஞ்சலில் பரவி வருகின்றன. இயேசு நற்கருணையில் தோன்ற முடியாது என்ற கருத்து நமக்கில்லை. ஆனால், தோன்றினால்தான் நம்புவேன் என்று நினைப்பது தவறு.

இப்படி நமக்கு வரும் தரவுகளை உடனடியாக நாமும் அடுத்தவர்களுக்கு பரப்பிவிட்டு அமைதி காக்கின்றோம். இது ஏன்?

'நான் நம்பியது போல அடுத்தவரும் நம்ப வேண்டும் என்பதற்காகவா?'

அல்லது

'என் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும், வாழும் கடவுள் என்றும் அறிந்துகொள்' என்று மற்றவர்க்குச் சொல்லி பெருமைப்படுவதற்காகவா?

இன்று நாம் காணும் அனைத்துமே அவரின் அடையாளங்கள்தாம்.

3 comments:

  1. " இன்று நாம் காணும் அனைத்துமே அவரின் அடையாளங்கள்தாம்.".. தந்தையின் கூற்று சரியே! இருப்பினும் நான் என் கையறு நேரங்களில் இறைவனிடம் ஒரு அடையாளம் கேட்டு அது எனக்கு கிடைக்கும் பட்சத்தில் அதைப்பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.ஆனால் எந்த வித ஆதாரமும் இன்றி வரும் விஷயங்களை மக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வெறும் விளம்பரத்திற்காகவும்,"உனக்குத் தெரியாத ஒரு விஷயம் எனக்கும்தெரியும்" என்ற தம்பட்டத்திற்காகவுமேயன்றி இதில் பெரிய உள் நோக்கம் இருக்குமாவெனத் தெரியவில்லை. மற்றபடி கண்டிப்பாக இன்று நம் கண்கள் காணும் அனைத்துமே அவரின் அடையாளங்கள் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.
    " கட்செவி அஞ்சல்", " தரவு" போன்ற புதுமையான தமிழ்வார்த்தைகளுக்காக தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete
  2. நீண்ட காலத் தேடலுக்கு பரிசு இன்று கிடையத்து நிங்கள் கொடுக்கும் கருக்கள் சிந்தித்து செயல்பட தூண்டும் அடையளங்கள் நம்பிக்கையின் பரிசு

    ReplyDelete
  3. Good reflection Yesu

    ReplyDelete