Monday, July 16, 2018

வானளாவ உயர்த்தப்படுவாயோ!

நாளைய (17 ஜூலை 2018) நற்செய்தி (மத் 11:20-24)

வானளாவ உயர்த்தப்படுவாயோ!

தான் வல்ல செயல்கள் நிகழ்த்தி மனம் மாறாத கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நாகூம் நகரங்களைச் சாடுகின்றார் இயேசு.

'கப்பர்நகூமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?' எனக் கேட்கின்றார்.

இயேசு தன் நேரம், ஆற்றல் அனைத்தும் இந்தப் பணியினால் விரயம் ஆகிவிட்டதாக உணர்கிறார். ஆகையால்தான் நான் இங்கே செலவழித்த ஆற்றலை வேறெங்காவது செலவழித்திருக்கலாம் என சோர்வு அடைகின்றார்.

தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான விதத்தில் நேரம் அல்லது ஆற்றல் செலவிடப்படுவது நமக்கு வருத்தம் தருகிறது. ஏனெனில், நாம் எதிர்பார்த்த விளைவு அங்கே நிகழ்வதில்லை. ஓடாத பஸ்ல ஏறி உட்கார்ந்துகொண்டு டிக்கெட் எடுத்து அமர்வது போல வாழ்க்கை சில நேரங்களில் அமைந்துவிடுகிறது. பஸ்சும் ஓடாது. நம் டிக்கெட் காசும் வீண். நாமும் அடைய வேண்டிய இடத்தை அடைய முடிவதில்லை.

இயேசுவின் இந்தக் கடிந்துகொள்ளுதல் அவருடைய மனதிருப்திக்குத்தானே தவிர, அவர் கடிந்துகொள்வதால் அந்த நகரங்கள் மாற்றம் அடையப்போவதில்லை. தன் மனக்குறையை இப்படி புலம்பித்  தீர்த்துவிடுகின்றார்.

நாளைய நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்பது இழுக்கு.


1 comment:

  1. தவறான இடத்தில், தவறான விதத்தில்,தவறான நேரத்தில் நமது ஆற்றலும், நேரமும் செலவழிக்கப்படுகையில் நமது மனதும்,உடலும் நொந்து போன நேரங்கள் நம் எல்லோருக்குமே பழக்கப்பட்டது தானே! ஆனால் இம்மாதிரி சமயங்களில் நம் கைமேல் பலன் ஏதும் கிட்டாமல் போயிடினும், பின்னால் என்றேனும் திரும்பிப் பார்க்கையில் அந்த நிகழ்வு நமக்கொரு பாடத்தைப் புகட்டியிருப்பதாக உணர முடியும்.யாரிடம் எதை எதிர்பார்க்கலாம்.....எதிர்பார்க்கக்கூடாது என்பது போன்று.இங்கே எனக்கொரு சந்தேகம்.... தந்தை குறிப்பிடும் திருக்குறள் வரிகள்.....
    " எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவ தென்பது இழுக்கு."
    தந்தை இதைச் சொல்வது யாருக்கு? இயேசுவுக்கா இல்லை வாசகர்களுக்கா?
    புரியவில்லை. இன்றையப் பதிவின் ஆங்கில வரிகள் சொல்வது போல் நமது கடந்து போன பழைய காலங்களின் ஞாபகங்களை திரும்பிப் பார்க்க எனக்கும் கூட ஆசைதான்! கொஞ்சம் சோகம் இழையோடினாலும் நம் கடந்த காலத்தை நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு பதிவு. நன்றிகள் தந்தைக்கு!!!

    ReplyDelete