Tuesday, July 17, 2018

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

நாளைய (18 ஜூலை 2018) நற்செய்தி (மத் 11:25-27)

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

'ஞானிகளுக்கும். அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனச் சொல்கிறார் இயேசு. 'இவற்றை' என்று அவர் எவற்றைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

இங்கே வெளிப்படுத்தப்பட்டவற்றைவிட வெளிப்படுத்தும் நிகழ்வுதான் முக்கியம்.

நம் அறிவு சில நேரங்களில் 'நாமே அறிதல்' என்ற நிலையிலும், சில நேரங்களில் 'மற்றவர் வெளிப்படுத்துதல்' என்ற நிலையிலும் உள்ளது.

விண்ணரசு பற்றிய மறைபொருள்கள் 'அறிதல்' நிலையில் நடப்பதில்லை. மாறாக 'வெளிப்படுத்துதல்' நிலையில்தான் நடக்கிறது.

இந்த நிலையில் ஒருவருக்குத் தேவையானது எல்லாம் 'வரவேற்கும் திறந்த உள்ளம்' மட்டும்தான்.

1 comment:

  1. " விண்ணரசு பற்றிய மறைபொருள்கள் 'அறிதல்' நிலையில் அல்ல; 'வெளிப்படுத்துதல்' நிலையில் தான் நடக்கிறது" என்பது தந்தையின் கூற்று. நாளைய விவிலியப்பகுதியில் கீழ்கண்ட வரியையும் பார்க்க முடிகிறது." தந்தையை மகனும்,அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு யாரும் தந்தையை அறியார்" என்பதே அது.தந்தையையும்,மகனையும் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று அவர்களே முடிவெடுத்த பிறகு நமக்கு 'வரவேற்கும் உள்ளம்' இருப்பதால் எந்த பயனும் கிட்டுமா?... தந்தைதான் விளக்க வேண்டும்.

    ReplyDelete