Saturday, December 7, 2013

என் காதுபடச் சபித்துக் கூறினீரா?

எப்ராயிம் மலைநாட்டைச சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா. அவர் தம் தாயிடம், 'உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்' என்றார். அப்பொழுது அவர் தாய், 'என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்றார். (நீதித் தலைவர்கள் 17:1-2)

சிம்சோன் கதையைச் சொல்லி முடிக்கின்ற நூல் மீக்கா என்ற ஒருவரைப் பார்த்துத் திரும்புகிறது. இது ஒரு வித்தியாசமான நிகழ்வு. இதன் பொருள் என்ன என்பது இன்னும் விவிலிய ஆய்வாளர்களின் எண்ணத்திற்குப் புலப்படவே இல்லை. ஒரு வீட்டில் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள் காணாமற் போகின்றன. அந்தக் குடும்பத்தின் தாய் காணாமற் போன பணத்திற்காகச் சபிக்கின்றார். எடுத்த மகன் தான் எடுத்ததாக ஒப்புக்கொள்கின்றார். உடனே அவரது தாய் அவருக்கு ஆசி வழங்குகின்றார்.

சாபம் ஆசியாக மாறுகிறது பணம் வந்தவுடன். அப்படி எடுத்துக்கொள்வோமா? 

'தன் மகன் தானே! எடுத்தால் பரவாயில்லை!' என்ற தாயின் பெருந்தன்மையா?

இந்தக் கேள்விகளுக்கு அர்த்தம் முழு நிகழ்வின் நிறைவில் ... 

1 comment:

  1. Anonymous12/07/2013

    ஆசீர்வாதமோ சாபமோ அதைப் பெறுபவரைவிட கொடுப்பவரைத்தான் பாதிக்கிறது.தன் வினை தன்னைச்சுடும் என்பதற்கேற்ப நாம் செய்யும் நன்மை தீமையின் பலன் சுவற்றில் அடித்த பந்தாக நம்மை நோக்கியே திரும்பும் என்பதுதான் உலக வழக்கு.இந்த நிகழ்வில் வரும் தாயின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்து கொள்ள முழு நிகழ்வின் முடிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம். வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete