Monday, December 23, 2013

என் துன்ப துயரங்களின் மிகுதியால்...

அன்னா இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன. குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, 'இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்' என்று கூறினார். (1 சாமுவேல் 1:12-16)

சீலோவாமில் உள்ள ஆண்டவரின் ஆலயத்தில் அன்னா புலம்பி அழுது கொண்டிருக்க அதை குடிபோதை என முத்திரையிடுகிறார் ஏலி. 'தான் நினைப்பது போலத்தான் மற்றவர்கள்!' என்று தன் முற்சார்பு எண்ணத்தால் முத்திரையிடுகிறார் ஏலி. ஆனால், தான் நல்லவள் என்பதை அவருக்கு உணர்த்துகின்றார் அன்னா. 

'யாரும் யாரையும் கீழ்த்தரமாகக் கருதக் கூடாது!' என்பதையே கற்பிக்கின்றன அன்னாவின் வார்த்தைகள். 

துன்ப துயரங்கள் வாழ்வில் மிகும்போது நம் உதடுகள் நம்மையறியாமலேயே துடிக்கத் தொடங்குகின்றன. துன்பம் இயற்கையின் நியதி. இடையிடையே இன்பத்தில் இளைப்பாறிக் கொள்கின்றது மனித வாழ்க்கை.

நம் வாழ்வின் துன்பங்களைப் போக்க வந்த மெசியாவின் பிறப்பைக் கொண்டாட ஊர் உலகம் தயாராகிக் கொண்டிருக்க அவர் மீண்டும் பிறப்பாரா?


1 comment:

  1. Anonymous12/23/2013

    துன்ப மிகுதியால் உதடுகள் துடிக்கும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் படைத்தவரின் பாதங்களைப் பற்றிக்கொள்வதுதான்.மனத்துயரில் உள்ளவர்களின்
    கண்ணீர் துடைப்போம்.அவர்கள் காயங்களுக்கு மருந்திடுவோம்.மாடடைக் குடிலில பிறந்த இயேசு பாலகனை நம் மனங்களிலும் பிறகக வைப்போம்.

    ReplyDelete