Friday, February 6, 2015

ப்ளீஸ் ப்ளஸ் மீ!

நேற்று இரவு என் ப்ரஃபெசர் ஒருவருக்கு இமெயில் அனுப்பினேன். மெயிலின் நிறைவாக, ப்ளீஸ் டு கன்ட்டின்யு டு ப்ளஸ் மீ என எழுதி முடித்தேன்.

சில நிமிடங்கள் கழித்து பதில் வந்தது. நான் கேட்டிருந்த அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு, கீழே அவர் இப்படி எழுதியிருந்தார். அவர் எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பு:

'கடவுள் தினமும் நம்மை ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கின்றார். நாம் அதற்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் இருக்க முயற்சித்தாலே போதும்!'

அதெப்படி என்று கேட்கிறீர்களா?

தாவீதின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு (காண்க. 2 சாமுவேல் 16:5-14):

தாவீது பகூரிம் என்ற ஊருக்கு வருகின்றார். அவரை எதிர்கொள்கின்ற சிமயி என்பவர் தாவீதை பின்வருமாறு பழிக்கின்றார்:

'இரத்த வெறியனே!
பரத்தை மகனே!
போ! போ!
இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்!'

இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் தாவீதின் படைத்தலைவருள் ஒருவராகிய அபிசாய் குறுக்கிட்டு 'இவனைக் கொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்!' என தாவீதிடம் கேட்பார்.

தாவீது நிதானமாகப் பதில் சொல்வார்:

'இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
அவன் பழிக்கட்டும்.
ஒருவேளை 'தாவீதைப் பழி' என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால்
'இவ்வாறு நீ ஏன் செய்தாய்?' என்று யார் சொல்ல முடியும்?
அவனை விட்டுவிடு!
அவன் பழிக்கட்டும்!
ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார்.
இன்று அவன் பழித்துப் பேசியதற்காக
எனக்கு அவர் நன்மை செய்வார்!'

இந்த நிகழ்வு தாவீதின் வாழ்வின் அஸ்தமனத்தின் போது நடக்கிறது. ஏனெனில் இன்னும் 6 அதிகாரங்களில் சாமுவேல் நூல் முடிந்து விடுகிறது. தாவீதும் இறந்து விடுகின்றார்.

'நாம் பேசுவதற்கு இரண்டு வயதில் கற்றுக்கொள்கிறோம். ஆனால், என்ன பேசுவது என்பதையும், எப்படி பேசுவது என்பதையும் நம் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்!'

மனித வார்த்தைகள் சோப்பு நுரை போன்றது என்பார்கள். அவைகளை ரொம்ப சீரியசா எடுக்கக் கூடாது. நம்மைக் காயப்படுத்தும், கலங்கடிக்கும் வார்த்தைகள் மற்றவரிடமிருந்து வருகிறதென்றால் அது கொஞ்ச நேரத்தில் மறைந்து விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மை நோக்கி வரும் ஆண்டவரின் ஆசீருக்கு நாம் குறுக்கே நிற்காமல் இருக்க முயற்சித்தலே சால்பு!


4 comments:

  1. Anonymous2/06/2015

    Dear Yesu I just got up having meditative reading of your today flower.may God continue to bless you with the wisdom of Solomon

    ReplyDelete
  2. மேற்கூறிய நிகழ்வு தாவீதின் அஸ்தமனகாலத்தில், உடல்வலுவிழந்த நேரத்தில் நடந்ததால் அவர் அமைதி காத்திருப்பாரோ! அடுத்தவர் நமக்குச் செய்யும் நிந்தைகளை, கூறும் பழிச்சொற்களை அதிலும் நாம் இன்னசன்டாயிருக்கும் பட்சத்தில் சகித்துக் கொள்ள ஒரு அசாத்திய மனம் வேண்டும்.ஆனால் அவற்றையும் மலர்படுக்கையாக மாற்றவல்லவர் எனக்கூறுகிறது இன்றையப் பதிவு.தவக்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இறைவனின் ஆசீர்வாதங்களை இருகரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளும் இவ்வேளையில் நம்மால் முடிந்தவரை நம்மிடம் வருபவர்களை அடிமனத்தின் ஆழத்திலிருந்து ஆசீர்வதிக்கலாமே! வாழ்த்தலாமே! "நாம் மேற்கொள்ளும் எந்த வினையும் நம்மிடமே திரும்பி வருகிறது"என்கிறது விஞ்ஞானம். அது ஆசீர்வாதமாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இன்றைய ஆசீர்வாதங்களுக்கு சுழியிட்ட தந்தைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  3. Anonymous2/06/2015

    Dear yesu today we begin our parish feast with flag hoisting. Pray for you.

    ReplyDelete
  4. Thanks IAS for the prayers. Have a nice day. God bless us. Wish you all the best for the celebrations.

    ReplyDelete