Monday, February 2, 2015

கடவுள் பெயரால்...

'கடவுள் இருக்கிறார் என்பதில் எல்லாம் எனக்குக் குழப்பமில்லை. அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதில் தான் குழப்பமாக இருக்கிறது' இந்த வாரம் ஆனந்த விகடன் 'வலைபாயுதே' பகுதியில் வாசித்தேன்.

கடவுள் பெயரால்...

எவ்வளவோ எழுதப்படுகின்றன. செய்யப்படுகின்றன.

நண்பர் ஐ.ஏ.ஏஸ் அவர்கள் தனக்குக் கடவுள் தோன்றி என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொல்வதாக ஒரு போதகர் ஆசீர்வாதம் டிவியில் சொன்னதாக எழுதியிருந்தார்.

ஆசிர்வாதம் டிவி அப்படின்னா எனக்கு நினைவிற்கு வருவது ஒரு பாஸ்டரோட போதனைதான். ஒருநாள் தற்செயலாக அந்தச் சேனலைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது நான் கேட்;டது இதுதான்.

'நம் ஆண்டவர் இயேசு 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத்தேயு 5:20) என்கிறார். மறைநூல் அறிஞர், பரிசேயரின் நெறி என்றால் என்ன? அதே மத்தேயு நற்செய்தி 23:23ல் வாசிக்கின்றோம். பரிசேயர்கள் தங்களின் உடைமையிலும், வருமானத்திலும், புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிகள் என எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாகப் படைப்பதே, கடவுளுக்குத் தருதலே பரிசேயரின் நெறி ஆக, நம் நெறி அவர்களின் நெறியைவிட சிறந்திருக்க வேண்டுமென்றால் நாம் கடவுளுக்கு (எனக்கு!) பத்தில் ஒரு பாகத்தைவிட இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.'

இயேசு மலைப்பொழிவில் (மத்தேயு 5:20) குறிப்பிடும் பரிசேயரின் நெறி என்பது அவர்களின் வாழ்வியல் அறநெறி. 23:23ல் அவர் சாடுவது அவர்களின் ஆலயம் சார்ந்த வெளிவேடத்தனத்தை. இரண்டிற்கும் முடிச்சுப் போட்டு தன் காரியத்தை முடித்துக் கொண்டார் அந்த பாஸ்டர்.

ஏஞ்சல் டிவி என்றாலே என் நினைவிற்கு வருபவர் சாது சுந்தர் சிங். இவர் நேர்காணல் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு காட்சி வந்ததாம். அதில் அவரைக் கடவுள் நரகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அங்கே, அவர் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பவுலையும், அன்னை தெரசாவையும் கண்டாராம். 'இவர்கள் எங்கள் உலகில் புனிதர்கள்! - ஆனால் இங்கே நரக நெருப்பில் என்ன செய்கிறார்கள்?' என்று கேட்டாராம். கடவுள் சொன்னாராம்: 'இவர்கள் ஆட்டுக்குட்டியின் பெயரை அவமதிப்பவர்கள்! இவர்கள் தவறான போதனைகளால் மக்களை நெறிகேட்டிற்கு ஆளாக்கியவர்கள்!'

இதே கனவை அமெரிக்காவில் ஒரு சிறுமி காண்பதாக யூடியூப்பிலும் ஒரு காணொளி வலம் வருகின்றது. யூடியூபில் கேர்ள் இன் ஹெல், அல்லது மதர் டிரேஸா இன் ஹெல் என அடித்தால் நீங்கள் இதைப் பார்க்கலாம். இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதும் தெரியவில்லை.
சதுரங்க வேட்டை திரைபடத்தில் உள்ள இரண்டு வசனங்கள் தாம் இன்றைய நம் கேள்விக்குப் பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்:

அ. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனிடமிருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது. அவனது ஆசையைத் தூண்ட வேண்டும்.

ஆ. நாம சொல்ற ஒவ்வொரு பொய்யிலயும் கொஞ்சம் உண்மை இருந்தாதான் அது பொய்யினு தெரியாது. நான் சொல்ற ஒவ்வொரு பொய்லயும் கொஞ்சம் உண்மை இருக்கும். ஒவ்வொரு உண்மையிலயும் கொஞ்சம் பொய் இருக்கும்.

கடவுள் ஒருவருக்குத் தோன்றுவது, தோன்றாததெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட அனுபவம். அதை அடுத்தவர்கள் மேல் திணித்து அவர்களை ஏதோ ஒரு உணர்வு ரீதியான அடிமையாக்கிவிடுவது தவறு என்பதே என் கருத்து.

அண்மையில் உமா சங்கர் பற்றிய விவாதமாகத் தான் இருக்கிறது. ஒரு ஐஏஎஸ் ஆஃபிஸர் கடவுளைப் பற்றி போதிக்கலாமா? உமா சங்கர் தான் கண்பார்வையற்ற ஒருவருக்கு கண்பார்வை தந்ததாகவும் சொல்கிறார். அப்படின்னா மருத்துவர்கள் தேவையில்லையே? என்பதுதான் பலரின் விமர்சனமாக இருக்கிறது. அவர் கையை வைத்தார். மற்றவர் குணம் பெற்றார். இது அந்த இரண்டு பேரின் அனுபவம்.

அறிவியலுக்கும், கடவுளுக்குமான போராட்டம் அண்மையில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நம் மூளை கடவுள் என்கிற ஒரு கான்செப்டை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

பைபிளில் சொல்லப்பட்டதெல்லாம் அறிவியில் உண்மை அல்ல.

'இந்த உலகம் எப்படி வந்தது?' என்பதற்கான பதில் பைபிளில் இல்லை. 'இந்த உலகம் ஏன் வந்தது?' என்பதற்கான பதில் தான் அதில் இருக்கிறது.

ஃப்ராய்ட் மாதிரியோ, மார்க்ஸ் மாதிரியோ, பெரியார் மாதிரியோ கடவுள் இல்லை அப்படின்னு சொல்லிட முடியல.

ஆஷ்விஷ் கான்சென்ட்ரேஷன் கேம்ப்பில் தனக்கு அருகில் இருந்தவர் கஷ்டத்தைப் போக்க தன் உயிரைத் தர முன்வந்த மாக்ஸிமிலியன் கோல்பே, அந்தக் கஷ்டத்திலும் கடவுளைப் பின்பற்றுவது என புத்தகங்கள் எழுதிய டையிட்ரிக் போன்ஹாஃபர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகளை வாசிக்கும் போது கண்ணுக்குத் தெரிபவற்றைத் தாண்டியும் சில உண்மைகள் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

அவர் பாஸ்டர், நான் ஃபாதர் என்ற நிலையில் அந்த பாஸ்டர் அப்படிச் சொல்வது பொய் என்றால், பெப்சி கம்பெனி காரன், கொகோ கோலா கம்பெனி காரனைப் பார்த்து 'நீ செய்வது தவறு!' என்று சொல்வது போல இருக்கும். ரெண்டு பேர் செய்வதும் தவறுதான்.

நாளைக்கே நான் ஒரு பங்குத் தளத்துல இருக்கேன்னு வச்சிக்குவோம். மொத்தம் 200 குடும்பங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை. 'என்னடா இன்னும் யாரையும் காணோம்!' அப்படின்னு நினைச்சிகிட்டே நான் ரூமை விட்டு வெளியே வர்றேன். கோயிலைத் திறந்து ரேடியோவில் பாட்டுப் போடும் வாத்தியாருக்கு ஃபோன் பண்ணி, 'என்ன சார்! இன்னும் வரலயா? பூசைக்கு நேரமாச்சு!' அப்படின்னு கேட்கிறேன். அவர் சொல்றார், 'ஃபாதர் நாங்க 200 குடும்பங்களும் நம்ம ஊருக்கு வந்திருக்கிற 'செகினா யாவே சபைக்கு' போறோம்!' - அப்படின்னுட்டு ஃபோனை வச்சிடுறார். இப்போ, நான் என்ன செய்வேன்? நானா கோயிலைத் திறந்து பூசை வைப்பேனா? அல்லது அந்த பாஸ்டரைப் போய் பார்ப்பேனா? கோவிலையும், பங்கையும் பூட்டிவிட்டு ஆயர் இல்லம் திரும்புவேனா? அல்லது ஒவ்வொரு வீடாகப் போய் 'நீங்க வாங்க! நீங்க வாங்க!' அப்படின்னு சொல்வேனா?

இது நடக்க நாட்கள் தொலைவில் இல்லை.

'மார்க்கெட்டிங்' தெரிந்தால் தான் கடவுள் என்ற ப்ராடக்டைக் கூட விற்க முடியும். நாம ரெண்டாயிரம் வருஷமா ஒரே மாதிரி விற்கிறோம். இப்போ வர்றவங்க வேற வழியில விற்கிறாங்க.

தீயா வேல செய்யணும் குமாரு!



4 comments:

  1. இன்றையப்பதிவைப்படித்து முடித்தவுடன் எனக்கும் 'Oh! my God' என்று கத்த வேண்டும் போல் தோன்றியது.'கடவுள்'....இரத்தத்தோடு கலந்துவிட்ட தாய்ப்பால் போல நம்மோடு ஒன்றரக் கலந்துவிட்ட விஷயம்.யாரும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்கும் விஷயமல்ல என்பது என் கருத்து.' கடவுளை' விவாதிக்கலாம்; ஆனால் கடவுளைப்பற்றிப் பேசுபவர்களை எப்படி,என்னவென்று விவாதிப்பது? அது நாகரீகமும் இல்லை.'இறைவனுக்கே' வெளிச்சம்.ஆயினும் இத்துணை சிரத்தை எடுத்த தந்தையைப் பாராட்டியே ஆகவேண்டும்!

    ReplyDelete
  2. Anonymous2/03/2015

    Thanks Yesu for your reflection. Ministry nowadays demands creativity and genuiness. Have a nice day

    ReplyDelete
  3. Yes IAS, you are correct. What we need is creativity. Why don't we think together about some creative solutions?

    ReplyDelete