Monday, February 16, 2015

கல்ச்சர் மிக முக்கியம் அமைச்சரே!

'நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ, கிரேக்கருக்கோ, கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்...நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.' (1கொரிந்தியர் 10:31-11:1)

நீங்க என்னைக்காவது மெக்டொனால்ட்ஸ்ல அல்லது கேஎப்சில அல்லது மேரி ப்ரவுன்ல சாப்பிட்டுருக்கீங்களா? அடுத்தமுறை சாப்பிடப் போன உங்களையே நீங்க என்ன செய்றீங்கனு அப்சர்வ் பண்ணிப் பாருங்க.

நாமாகவே கதவைத் திறப்போம். பெரும்பாலும் ஏசி வசதியோடு இருப்பதால் கண்ணாடிக் கதவுகள் மூடித்தான் இருக்கும் (ரயில்நிலையம், விமானநிலையம் தவிர!). உள்ளே போவோம். வரிசையில் நிற்போம். வரிசையில் இருக்கும் போதே மேலே எழுதியிருக்கும் மெனு கார்டில் ஒன்றை மனதுக்குள் செலக்ட் செய்வோம். நம் முறை வந்ததும், தடுப்பிற்கு அந்தப்பக்கம் இருக்கும் பையனிடம் அல்லது பெண்ணிடம் நம் ஆர்டரைச் சொல்லுவோம். கரன்சியை எடுத்து நீட்டுவோம் (ஏன்னா! காசுக்கே இங்க மெனு இல்ல!) அல்லது கார்டை எடுத்து நீட்டுவோம். பின் நம்பரை அடிப்போம். பில்லை வாங்குவோம். நமக்கான டிரே ரெடியானவுடன் அதை எடுத்துக்கொண்டு வரிசையில் நிற்பவர்களை இடிக்காமல் அப்படியே ரெண்டு கையிலயும் தூக்கிக் கொண்டு ஏதாவது காலியிடம் இருக்கிறதா என்று தேடுவோம். கிடைத்த இடத்தில் அமர்ந்து அந்த டிரேயில் வைக்கப்பட்டிருக்கும் அட்வர்டிஸ்மண்ட் பேப்பரைப் படித்துக் கொண்டே சாப்பிடுவோம் (தனியாகச் சென்றால்!). பின் நாம் சாப்பிட்ட இடத்தை நாமே துடைத்துவிட்டு குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று பார்த்து நாமே குப்பையைக் கொட்டிவிட்டு, குப்பைடித்தொட்டிக்கு அருகில் டிரேயை வைத்துவிட்டு நாமே கதவைத் திறந்து வெளியே வந்துவிடுவோம். (இப்ப நம்ம ஊர் மேரி ப்ரவுன்ல ஒரு ஹாரன் வச்சிருக்காங்க. சாப்பாடு நல்லா இருந்துச்சுனு நினைச்சா அதை ரெண்டு தடவை அடிச்சிட்டு வரணுமாம்! இதைப் பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம்!)

இந்த நடைமுறைதான் உலகத்தின் எந்த ஃபாஸ்ட்புட் செண்டருக்குப் போனாலும் நாம கடைப்பிடிக்க வேண்டியது. இதை நமக்கு யார் சொல்லிக்கொடுத்தா? யாரும் சொல்லிக்கொடுக்கல. ஆனா, உலகம் ஃபுல்லா எப்படி இந்த நடைமுறை வந்தது?

ஃபோன் பண்ணி ஆர்டர் கொடுப்பதும், டேபிளில் உட்கார்ந்து கொண்டு, 'தம்பி, ஒரு இலையப் போடுப்பா!' என்று கேட்பதோ, சர்வரிடம் என்ன இருக்கிறது என்று கேட்பதும், சாப்பிட்டு முடிந்தவுடன் கல்லாப்பெட்டியில் உள்ளவரிடம் பில்லைக் கொடுத்துவிட்டு, சீரகம் சோம்பு தேடிக்கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, குச்சியை எடுத்துக்கொண்டு பல்லைக் குத்திக் கொண்டே வெளியே வருவதும் நாம் மேக்டொனல்ட்ஸில் செய்வதில்லை. ஏன்?

இந்த ஃபாஸ்ட்புட் கல்ச்சர் (fastfood culture) எப்படி எல்லாராலும் சுலபமா கற்றுக்கொள்ள முடிகிறது என்பதைப் பற்றி எம்.பி.ஏவின் ஆர்கனைசேஷனில் பிஹேவியரில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதர்கள் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலாச்சாராங்களை நமக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அல்லது நாமாகவே மற்றவர்களை இமிடேட் செய்து கற்றுக்கொள்கிறோம்.

'கல்ச்சர்' (கலாச்சாரம்) - ஆனால் நம் பதிவில் 'கல்ச்சர்' என்றே வைத்துக்கொள்வோம். கல்ச்சர் நம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தவொரு கல்ச்சருக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, வேல்யூ. மற்றொன்று, பிலிஃப். அதாவது, நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நாம் கடினமாக உழைப்பது ஒரு மதிப்பீடு. இந்த மதிப்பீட்டிற்கு ஊன்றுகோலாக இருக்கும் நம்பிக்கை என்னவென்றால், 'பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், அல்லது நலமாக இருக்கலாம், அல்லது அந்தஸ்தோடு இருக்கலாம்'. ஆக, மதிப்பீடும், நம்பிக்கையும் ஒரு கலாச்சாரத்தில் இணைந்தே செல்கின்றன.

கலாச்சாரம் என்று சொல்லும் போது அங்கே நாம் மூன்று வகையில் செயல்படுகின்றோம்: ஒன்று, எத்னோசென்ட்ரிசம் (ethnocentrism) - அதாவது என் கல்ச்சர் தான் சிறந்தது என்று நினைத்துக்கொண்டு மற்ற கல்ச்சர்களை மதிக்காமல் இருப்பது. இரண்டு, செனோசென்ரிசம் (xenocentrism) - அதாவது அடுத்தவரின் கல்ச்சர் தான் சிறந்தது என நினைத்து தன் கல்ச்சரைத் தரம் தாழ்த்துவது. மூன்று, கல்ச்சுரல் ரெலடிவிசம் (cultural relativism) - இருக்கின்ற இடத்தில் உள்ள கல்ச்சரை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதை மதித்துப் பின்பற்றுவது.

இதை அப்படியே மெக்டொனால்ட்ஸில் ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம்: முதல் குழுவினர் என்ன செய்வார்கள்? 'என்னப்பா ஒரே வரிசையா இருக்கு! இது என்ன ஓட்டல்! வந்தமா ஆர்டர் பண்ணோமா, சாப்பிட்டோமா, பில் கட்டுனுமானு இல்லாம!' அப்படிப்பாங்க. இரண்டாம் குழுவினர், 'அப்பப்பா என்ன ஒரு அழகான ஏற்பாடு! இப்படியில இருக்கணும். நம்ம வசந்த பவனையும், சரவணபவனையும் பாரு! என்ன கூட்டம்! தண்ணியில சுத்தமில்லை! டேபிளை சரியா துடைக்க மாட்டாங்க! டிப்ஸ் கொடுத்தாதான் சர்வரே வருவான்!' என்று புலம்புவார்கள். மூன்றாம் குழுவினர் மெக்டொனால்ட்ஸையும் மதிப்பார்கள், சரவணபவனையும் மதிப்பார்கள். போகின்ற இடத்திற்கு ஏற்றாற்போல தங்களையே மாற்றிக்கொள்வார்கள்.

சரி இந்த பில்ட்அப் எதுக்குனு கேக்குறீங்களா?

இன்றைக்கு நாம் வாசித்த இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கொரிந்து நகரத் திருச்சபையில சந்தித்த கல்ச்சர் பிரச்சினைக்கு அழகான தீர்வு சொல்றார். பிரச்சினை இதுதான். கொரிந்து நகரம் - ஏதன்ஸ்கு அடுத்தபடியாக கலாச்சாரத்தில் வளர்ந்து கிரேக்க நகரம். இங்கேயிருந்து கிறிஸ்தவங்க ஆனவங்களுக்கு, தலையும் புரியல காலும் புரியல. 'நாம கிறிஸ்தவரா ஆயிட்டா நம்மள யூதர்னு சொல்வாங்களா? அல்லது கிரேக்கர்னு சொல்வாங்களா? அல்லது கிறிஸ்தவர்னு சொல்வாங்களா? நாம எந்தக் கல்ச்சரை ஃபாலோ பண்ணுவது? இந்த மூணுல எது பெரியது? யாரு பெரியவங்க?' - இப்படி நிறைய கேள்விகளோட இருக்காங்க.

இது ஒரு சமூகவியல் பிரச்சினை. பவுல் இத ரொம்ப கேர்ஃபுல்லாதான் ஹேண்டில் பண்ணனும். அப்படி இல்லனா இதயத்திற்கு மாவுக்கட்டு போடும் அளவுக்கு கண்டவுங்க கண்ட மாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்கள!

எத்னோசென்ட்ரிசமும் வேண்டாம். செனோசென்ரிசமும் வேண்டாம். கல்ச்சுரல் ரெலடிவிசம் போதும்! - இதுதான் பவுலின் பதில்!

'எதைச் செய்தாலும் கடவுளுக்காக செய்றோம்' அப்படின்னு நினைச்சிட்டு, 'அனைவருக்கும் பயன்தருவதை நாடுங்க!' அப்படின்னு முடிக்கிறார்.

கல்ச்சர் மிக முக்கியம் அமைச்சரே!




5 comments:

  1. Padre buona sera tu hai paragonato lettura di oggi con Mec donals hosaputo tante cose anche saro' a conoscenza della nostra cultura. Grazie complimenti

    ReplyDelete
  2. 'கலாச்சாரம்' என்பது நம் இரத்தம்,சதையோடு பின்னிப்பிணைந்த ஒன்று போல் தோன்றினும் அது கொஞ்சம் நாமிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது..தந்தையின் சொற்களில் ..நம் 'மதிப்பீடு, நம்பிக்கை' இவைகளுக்குட்பட்டு.கிரேக்க மக்களின் சமூகப்பிரச்சனையைக் குறிப்பிட்டு இறுதியாக " எதைச்செய்தாலும் ஆண்டவருக்கும்,மனிதருக்கும் பயன் தருவதாக இருக்கட்டும்" என்று தீர்ப்பு கூறியிருப்பது நிறைவான தீர்வு.' இதயத்துக்கு மாவுக்கட்டு' தங்களுக்கே உரித்தான சொற்றொடர்....இரசிக்கும்படி இருந்தது.
    தந்தையே! தாங்கள் இன்று தொடங்கவிருக்கும் இறுதி செமஸ்டரில் இறைவனின் திருக்கரமும்,அவரின் திருவருளும் தங்களோடு தங்க வாழ்த்துக்கள்!..தங்களின் செயல்கள் அனைத்தும் இறைவனை மகிமைப்படுத்தட்டும்!

    ReplyDelete
  3. Anonymous2/16/2015

    Yesu happy to talk to you. Be a Roman when you are in Rome. We the Indians always criticise our culture saying stories like oru American oru Japanese oru Indian ituthangalam. ....at last the stories ll humiliate the Indians. We laugh at ourselves.

    ReplyDelete
  4. Often times it has been so!

    ReplyDelete