Wednesday, February 25, 2015

எஸ்தர்

நாளைய முதல் வாசகத்தை அலங்கரிப்பவர் எஸ்தர்.

எஸ்தர் நூலில் சில பகுதிகள் எபிரேயத்திலும், சில பகுதிகள் அரமேயத்திலும் மற்றும் சில பகுதிகள் கிரேக்க மொழியிலும் இருக்கின்றன. ஆக, இந்த நூலை முழுமையாக வாசிக்கும் போது கூட அதன் கோர்வை நமக்குப் பிடிபடுவதில்லை.

புத்தகத்தோட கான்செப்ட் சிம்பிள்: 'ஜீரோவா இருந்து ஹீரோவான கதை!'

யூத குலத்தையே சதி செய்த ஆமானிமிருந்து தன் மக்களை மீட்க எஸ்தர் என்ற அரசி மேற்கொள்ளும் 'இனக்காப்பு முயற்சியே' இந்த நூலின் சாரம்.

'சிங்கத்தின்முன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்!'

இதுதான் எஸ்தரின் செபம்.

பல நேரங்களில் சமூகத்தின் கீழ்தட்டு மக்களைத் தான் கடவுள் தன் பணிக்குத் தேர்ந்தெடுப்பார் என்று நாம் நினைக்கிறோம். இல்லை. கடவுளின் தெரிவு எல்லா மக்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. எஸ்தர் அரசவையில் இருந்தாலும் கடவுளின் பணிக்காக அழைக்கப்படுகின்றார். தன் பணியைச் செய்கின்றார்.

ஆக, அழைப்பு நாம் எங்கிருந்தாலும் வரும்.

அதற்கேற்ற பதிலை நாம் தயாரா என்பதுதான் கேள்வி!


3 comments:

  1. It's nice thoughts and also riflect my occation.Thank you

    ReplyDelete
  2. எதிரிகளிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்ற முனையும் எஸ்தர் " சிங்கத்தின் முன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்குத்தாரும்" எனக்கேட்பாராகின் நினைத்த காரியத்தை இறைவனுக்காகவும், தன்னைச்சார்ந்த மக்களுக்காகவும் செய்து முடிப்பதில் அவருக்குள்ள வாஞ்சை தெரிகிறது.நமக்கும் கூட பல நேரங்களில்,பல விதங்களில் அழைப்பு வருகையில் நம்மால் இயன்றதைச் செய்கிறோமா அல்லது புறமுதுகிட்டு ஓடுகிறோமா? தந்தையின் வார்த்தைகள் யோசிக்க வைக்கின்றன."கடுகு சிறுத்தாலும் காரமுடையது"எனக்காட்டும் பதிவு.

    ReplyDelete
  3. Anonymous2/26/2015

    Esthar teaches the providence presence and guidance of God to whom all who trust Him. May God bless all

    ReplyDelete