Thursday, February 12, 2015

இதற்கிடையில் நாம்!

'ஆம் ஆத்மி காரங்க வீட்டுக்;கு ஓட்டு கேட்டு வந்தாங்க.
அவங்க ஏதோ விளக்கமாறு விக்கிறவறங்கனு நினைச்சி
எங்க அம்மா 'போய்ட்டு அடுத்த வாரம் வாங்க!'னு சொல்லிட்டாங்க!'

இது கடந்த தமிழகத் தேர்தலின் போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஒரு துணுக்கு.

இன்றைக்கு டெல்லியில் இந்த விளக்கமாறு சின்னம் தான் 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஏற்கனவே முதல்வர் பதவிக்கு தெரிவானாலும் அதை அந்தத் தலைவர் ராஜினாமா செய்ததால் தான் இப்போது அடுத்த தேர்தல். இந்தக் கட்சியின் இந்த மாபெரும் வெற்றியை இந்தியாவே வியந்து பார்க்கிறது. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, ஆம் ஆத்மி கட்சியினர் அடுத்த கட்சியினரை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தங்கள் கட்சியினரின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மட்டும் முன்னிறுத்தி வாக்கு சேகரித்தனர். இது நம் நாகரீக வளர்ச்சியின் நல்ல அடையாளம்.

மோடி அலை, மோடி அலை என்ற சொன்னவர்கள் மத்தியில் இன்று சுனாமி வந்துவிட்டது என வர்ணக்கிறது மீடியா.

கொஞ்ச நாளாவே பாஜக செய்து வரும் காவி அரசியல். டெல்லியில் கிறித்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது, ஒபாமா வருகையின் போது மோடி தச்ச பெயர் போட்ட சட்டை என எல்லாம் சேர்ந்து அவர்கள் பக்கமே திரும்பி விட்டது.

ஆக, அதிகாரம் என்றும் ஆட்சி செய்வதில்லை என்பதுதான் டெல்லி தரும் பாடம்.

நம்ம ஊரு பக்கம் நாளை மறுநாள் சிரிரங்கத்தில் இடைத்தேர்தல். தான் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் தன் கார்டனை விட்டு வெளியே வராத ஜெயா கடிதம் வழியாக வாக்கு சேகரிப்பதும், நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த அமைச்சர்கள் இங்கு முகாமிட்டுக் கிடப்பதும், ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரைச் சாடியும், பணத்தை வாரி இறைத்தும் வாக்குகள் சேகரிப்பதைப் பார்க்கும் போது நாம் நாகரீகத்தில் பின்னோக்கிப் போகிறோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதிகாரத்திற்காக படும் பாட்டை நம் ஊரின் முன்னேற்றத்திற்காகப் படுவதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் இன்னொரு பக்கம் சட்டக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினை. ஆளும் கட்சியை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காலங்காலமாகப் பயன்படுத்தும் ஒரு எளிய ஆனால் பெரிய ஆயுதம் தான் மாணவர்கள். இதில் எல்லா மாணவர்களும் ஆதரவு என்ற அடிப்படையில் சாலையில் தான் தவம் கிடக்கின்றனர். மாணவப் பருவத்தின் ஆற்றலை இப்படிப் போராடும் குணமாக மாற்றுவதில் எதிர்க்கட்சிகள் போட்டி போடுகின்றன.

ஆட்சிக்கு வருபவர்கள் தாங்கள் போட்ட காசை எடுத்து விடலாம் எனப் பார்க்கின்றனர்.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே காலை முதல் மாலை வரை சுட்டும் வெயிலில் தவிக்கும் மக்கள் ஒருபுறம். ஆயிரம், இரண்டாயிரம், ஐந்தாயிரம் என உடனடி ஆசை காட்டி மக்களை வளைக்கும் கட்சிகள் மறுபுறம். இந்தக் கட்சிகள் பின்னால் செல்லும் கூட்டத்தைப் பார்க்கும் போதும் பரிதாபமாக வே இருக்கிறது.

நாம் நாட்டைப் பற்றி சிந்தித்து விடக் கூடாது என்று நம்மை பிஸியாகவே வைத்திருக்கின்றன நம்முடைய தொலைக்காட்சிகள்.

ஒரு நாளில் மூன்று முறை டிரஸ் மாற்றும், தன் பெயரையே தன் சட்டையில் போட்டுப் பெருமைப் பட்டுக் கொள்ளும் மோடி ஒரு பக்கம், தானும் செயல்பட முடியாமல், மற்றவர்களையும் செயல்பட விடாமல் செய்து கொண்டிருக்கும் ஜெயா மறுபக்கம்.

இதற்கிடையில் நாம்!

எங்கே போகின்றோம் நாம்?


4 comments:

  1. சுய ஆய்வுடன் நம்மை சிந்திக்கவும் தூண்டும் கருத்தாழமிக்க ஒரு பதிவு.நம் நாட்டின் அவலநிலைக்குக் காரணமே இந்த அரசியலும், சுயநலமிக்க அரசியல்வாதிகளும்தான்.இவர்கள தங்கள் சக்தியையும்,நேரத்தையும் தங்களை வளர்த்துக்கொள்ள அல்ல,எதிராளியை அழிக்கவே பயன்படுத்துகிறார்கள்.புறத்தூய்மை பற்றிக் கவலைப்படும் இவர்கள் அகத்தூய்மை என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள்." பணிவிடை பெறுவதற்கல்ல; பணிவிடை புரியவே வந்தேன்" என்றவரின் வழியைப்பின்பற்றும் ஒரு 'கெஜ்ரிவால்' அல்ல, ஓராயிரம் 'கெஜ்ரிவால்கள்' தோன்ற வேண்டும் நம் நாட்டை அடுத்த நிலைக்கு நகர்த்த.எங்கோ அயல்நாட்டில் இருந்துகொண்டு தன்தாய்மண்ணின் ஏற்ற இறக்கங்களை இத்துணை நுண்ணிப்பாக கவனிக்கும் தங்களின் நாட்டுப்பற்றுக்கும்,கரிசனத்திற்கும் ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. Anonymous2/12/2015

    One dilemma
    One appreciation
    More compliments
    My comments
    Dilemma:
    I read your article very at five thirty before I go for walk. Today I read but I didn’t know what to comment on.
    Appriciation:
    I really appreciate that you are updating with the current incidents occurring here in India, Tamilnadu, Madurai and of course Ayan Nathampatti Sebastiar Festival too. Hats off Yesu.
    Compliments:
    Today I had invited Fr. Prince SDB for whom I wanted to introduce you and your blogs. To my surprise he is a priest who is crazy about your blogs. He was sharing many of your blogs. He said whether I read bible or not but I don’t fail to read his blogs. He is Rector of Don Bosco ITI in Lalkudi, kumbakonam diocese. He shares your idea with his students every day.
    A humble request:
    He suggested if you could post your blogs a little earlier, at least Sunday reflection he can use it for preaching.
    My Comments on your blog:
    As a seminarian, I too used to comment on politicians but now I stopped. Because, a street vendor who invests Rs 300 would like to earn Rs. 500 as his salary and Rs. 200 for his vehicle maintenance. Similarly a politician who invests in ‘kodi kodiya’ he also tries to earn multi ‘kodi’ of course ‘anyhow’. Priests and Religious what do we invest that we have ‘this and that’. I am not able to invite a good retreat preacher; because they charge more. They say “word of God is not only powerful but also costly. Church also plays politics and calls it diplomacy or prudence.
    In my parish, not only Students-Lawyers are diverted but youth everywhere. In my parish there are 65 boys. Some are good-bad, some are creative- reactive, some are useless-problematic. Just yesterday as I went for walk in the school ground I found: three bottles, 5 contraceptive articles-don’t want to write bluntly, scattered side dish, you know they also did their excretion. Tension, discouragement, not knowing what to do…ministry is really challenging.

    ReplyDelete
  3. Anonymous2/12/2015

    Mistakes are found in my reply yesu. sorry

    ReplyDelete
  4. Anonymous2/13/2015

    Beautiful thoughts

    ReplyDelete