Thursday, February 12, 2015

சின்னச் சின்ன ஆசைகள்

மூன்றாம் வருடத்தின் முதல் செமஸ்டர் முடிந்து விட்டது.

இரண்டாம் செமஸ்டர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இப்பதான் வந்த மாதிரி இருக்கு. இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. மதுரையில் சிரிப்பும், கண்ணீருமாய் அவனியாபுரம் ஏர்போர்ட்டில் நண்பர்கள் பிரியாவிடை தந்தது இன்னும் கண்முன்னே நிற்கின்றது. 'நல்லா போய்ட்டு சாதிச்சுட்டு வா!' என்று வந்திருந்தவர்கள் சொன்னார்கள். அந்த சாதனையை நோக்கித் தான் போய்க்கொண்டிருக்கிறேனா என்ற கேள்வி என்னுள் இன்று.

கடந்த இரண்டரை ஆண்டுகளையும், கடந்த ஐந்து செமஸ்டர்களையும் வைத்து ஒரு சின்ன ரிவிய்யூ செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இந்த முறை ஸ்வோட் அனாலிசிஸ் செய்து பார்க்கலாமே என்று நினைத்தேன்.

ஸ்வோட் அனாலிசிஸ் (SWOT analysis) என்பது Strengths, Weaknesses, Opportunities, Threats என்ற நான்கு வார்த்தைகளின் முதல் எழுத்துகள் இணைந்து உருவாகும் வார்த்தை.

நம்முடைய வலிமைகள், பலவீனங்கள், சந்தர்ப்பங்கள், எதிர்ப்புகள் - இந்த மொழிபெயர்ப்பு ஏறக்குறைய ஆங்கில வார்த்தைகளின் நெருக்கம் என நினைக்கிறேன்!

சில நேரங்களில் நம்மைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் போது அது நமக்கு பயமாகவே இருக்கிறது. அதனால் தான் நம்மைப் பற்றி நினைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறோம்.

புதிய மேகம், புதிய ஊர், புதிய நபர், புதிய சாலை என்று நான் பயணம் செய்யும் போதெல்லாம் என்னைப் பற்றிய உணர்வு புதியதாக மலர்வதாகவே எனக்குத் தோன்றும்.

புதிய இடத்தில் நாம் ஒரு நிர்வாணம். அந்தப் புதிய இடத்தில் உள்ளவர்களுக்கு நம்மைப் பற்றி எதுவும் தெரியாது - நம் பெயர், ஊர், மொழி, கடவுள், கொள்கை, கற்பு, கீழ்ப்படிதல், அருட்பணி நிலை - எதைப்பற்றியும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. எதையும் அவர்கள் கேட்கவும் விழைவதில்லை. ரயிலில் ஏறினால் நாம் ஒரு பயணி. கடைக்குச் சென்றால் நாம் ஒரு வாடிக்கையாளர். அவ்வளவுதான். இந்த மாதிரியான நேரங்களில் தான் என் கூடு திறப்பது போல இருக்கும்.

அப்படி இப்படின்னு நாலஞ்சி பேப்பர் வேஸ்ட் பண்ணி எனக்குத் தெரிந்ததையெல்லாம் இந்த நான்கு கட்டங்களில் நிரப்பியும் விட்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு ரொம்ப அம்பிஷன்ஸ் இருந்துச்சு. அப்படியாகனும். இப்படியாகனும். நிறைய சாதிக்கணும். அப்படி இப்படி நிறைய தோணும். அம்பிஷன் தப்பா ரைட்டானு இப்ப கேட்டா நான் தப்பு என்றே சொல்வேன். வாழ்க்கயோட நோக்கம் நாம முழு மனிதரா மாறுவதா அல்லது மற்றவர்களை முழு மனிதர்களாக மாற்றுவதா என்ற கேள்வி என்னுள் நிறையவே இருக்கிறது.

ஒரு சிலர் சொல்வாங்க, 'நம்ம வாழ்க்கையோட நோக்கம் நாம நமது முழுத் திறன்களைக் கண்டு கொள்வதில் தான் இருக்கிறது!'

மற்றும் சிலர் சொல்வாங்க, 'இல்ல. இல்ல. நம்ம வாழ்க்கையோட அர்த்தம் மற்றவர்களுக்கு நல்லது செய்வதிலும், மற்றவர்களை முன்னேற்றுவதிலும் தான் இருக்கிறது'.

இந்த ரெண்டுல எது ரைட்டுனும் என்னால் சொல்ல முடியல.

ஆனா, இந்தப் புதிய செமஸ்டர்ல முழுக்க முழுக்க ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் என்பது என் முதல் குறிக்கோள்.

பயம் இல்லாமல் வாழணும்.

ஏதாவது ஒன்னை அல்லது ஏதாவது ஒரு கடவுளை முழுசா நம்பணும்.

எளிதாக மன்னிக்கணும்.

டெய்லி சிரிக்கணும்.

நல்ல நண்பனா இருக்கணும்.

ரிஸ்க் எடுக்கணும்.

ஐ மஸ்ட் ஃபாலோ மை ட்ரீம்ஸ்.

ஏதாவது ஒன்னு மேல பைத்தியம் பிடிச்ச மாதிரி அதையே செய்யணும்.

எனக்கு நானே நல்லா இருக்கணும்.

ரொம்ப ட்ராவல் பண்ணணும்.

என் சந்தோஷத்தை நானே உருவாக்கிக்கணும்.

நான் விரும்பும் மாற்றத்தை என்னிடத்தில் தொடங்கணும்.

என்ற சின்னச் சின்ன ஆசைகள் இந்த புதிய செமஸ்டரில்.



3 comments:

  1. 'ஸ்வோட் அனாலிஸிஸ்'...முற்றிலும் புதிதான வார்த்தை.முடிந்த பயணத்தைப் பின்னோக்கிப் பார்த்து தவறவிட்ட காரியங்களுக்காக வருத்தப்படாமல், வரப்போகும் நாட்களுக்காகத் திட்டமிடல் ஒரு அழகான 'attitude.' எந்த மனக்குழப்பமுமின்றி இத்துணை தெளிவாக யோசித்து,யோசித்த அத்தனையையும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளும் தங்கள் துணிச்சல் தங்களின் மிகப்பெரிய பலம்.தங்களையும்,வரப்போகும் புதிய செமஸ்டரையும்,தங்களின் படிப்பையும்,கனவுகளையும், சின்ன மற்றும் பெரிய ஆசைகளையம் இறைவன் நிறைவேற்ற வேண்டுமென்று மனதார விழைகிறேன்; வாழ்த்துகிறேன்! அனைத்து உடல்,உள்ள சுகத்தையும் தந்து இறைவன் தங்களை ஆசீர்வதிப்பாராக! All The Best for ur forth coming semester Father! May God be with U in all ur
    endeavours....

    ReplyDelete
  2. Anonymous2/13/2015

    Yesu good morning. I believe u did your exams well. I too remember the nice moments of saying to you bye from madurai. Take care. Wish you all the best for the new semester

    ReplyDelete