Thursday, February 21, 2019

உன் பெயர் பாறை

இன்றைய (22 பிப்ரவரி 2018) திருவிழா

உன் பெயர் பாறை

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் திருவிழாவைக் கொண்டாடுகிறது.

பேதுருவைத் தலைவராகக் கொண்டாடும் இந்நாளில், திருத்தந்தையைக் கொண்டாடும் இந்நாளில், இயேசு பேதுருவிடம் மனம் திறந்து உரையாடும் ஒரு நிகழ்வு என் மனத்தில் எழுகிறது. இதை லூக்கா மிக அழகாகப் பதிவு செய்கிறார்:

'சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து!' (லூக் 22:31)

ஆக, வலுவின்மையில் இருக்கும் பேதுரு தன் சகோதரர்களின் வலுவின்மையைக் கண்டு அவர்களை உறுதிப்படுத்த வேண்டும்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேதுரு 5:1-4), பேதுரு மிக அழகாகப் பதிவு செய்கிறார்:

'உங்கள் பொறுப்பில் இருக்கும் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள். கட்டாயத்தினால் அல்ல ... மன உவப்படன் செய்யுங்கள். ஊதியத்திற்காக அல்ல ... விருப்போடு பணி செய்யுங்கள். அடக்கி ஆளாமல் ... முன்மாதிரியாக இருங்கள்'

திருஅவையின் பணிப்பொறுப்பில் இருக்கும் அனைவரும், மன உவப்பு. தன்னார்வம், முன்மாதிரி வாழ்வு என்ற மூன்று பண்புகளைப் பெற்றுக்கொள்ள முயல்வோம்.


2 comments:

  1. இறைவா!திருஅவையின் பணிப்பொறுப்பில் இருக்கும் அனைவரும் மன உவப்பு,தன்னார்வம், முன்மாதிரி வாழ்வு என்ற மூன்று பண்புகளிலும் சிறந்தோங்க, உம் தூய ஆவியால் அவர்களை நிறைத்தருளும். ஆமேன்.

    ReplyDelete
  2. அருட்பணியாளர்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டதொரு பதிவு."உங்கள் பொறுப்பில் இருக்கும் மந்தையை நீங்கள்.........அடக்கி ஆளாமல் முன்மாதிரியாக இருங்கள்.".... எனும் வரிகள் திருஅவையின் பணிப்பொறுப்பில் இருக்கும் அனைவரும் மன உவப்பு,தன்னார்வம்,முன்மாதிரி வாழ்வுஎன்ற மூன்று பண்புகளிலும் சிறந்தோங்கி நிற்க இல்லறத்தார் நாமும் அவர்களுக்குத் துணை நிற்போம்
    மேலே காணும் படத்தில் இருப்பவர்கள் பிரதிபலிப்பது " பாறையையா?", "பனிக்கட்டியையா?" இரண்டையுமேதான்.ஸ்திரத்தன்ன்மையில் "பாறையாக" இருக்கும் இவர்கள் தங்களின் அன்பைத் தங்கள் மந்தைக்கு வெளிப்படுத்துவதில் ஒரு "பனிக்கட்டியாக" உருகவும் தயங்குவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது அவர்களின் கபடற்ற தழுவல்.அழகானதொரு பதிவிற்காகத் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete