Sunday, February 10, 2019

தொட்டவர் நலமடைந்தனர்

இன்றைய (11 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:53-56)

தொட்டவர் நலமடைந்தனர்

நாம் விரும்பியோ, விரும்பாமாலோ ஒருவர் மற்றவரோடு இணைந்த நிலையில் இருக்கின்றோம். இல்லையா?

'கனெக்ஷன்ஸ்' இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது. ஒன்று, 'கான்டக்ட்ஸ்,' மற்றொன்று 'கம்யூனிகேஷன்.' எடுத்துக்காட்டாக, என் அறையில் உள்ள இணைய இணைப்பு வேலை செய்யவில்லை என வைத்துக்கொள்வோம். இந்தப் பிரச்சினையை நான் சரி செய்ய, முதலில் நான் இந்த இணைப்பு தரும் நிறுவனத்தோடு 'கான்டக்ட்; ஏற்படுத்த வேண்டும். பின், என் பிரச்சினை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறாக, இரண்டு நிலைகளில் என் பிரச்சினை சரியாகிவிடும். ஆனால், ஒருவேளை நான் இதே நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். நானே இந்தப் பிரச்சினையைச் சரி செய்துவிடுவேன். ஒரு நிலையில் என் பிரச்சினை சரியாகிவிடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்' என வாசிக்கின்றோம். நோய் வந்து, மருத்துவரைச் சந்தித்து, அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிட்டு நலமடைவது போல அல்லாமல், மருத்துவர் தொட்டவுடனேயே அல்லது மருத்துவரைத் தொட்டவுடனேயே நோய் சரியாகிவிடுகிறது. இதுதான் உச்சகட்ட இணைப்பு.

இயேசு எப்போதும் தன்னை மற்றவர்களோடு இணைந்த நிலையிலே வைத்திருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் 'படைப்பு' நிகழ்வை வாசிக்கின்றோம். 'ஒளி தோன்றுக!' என்று கடவுள் சொல்ல, அது அப்படியே ஒளியாக மலர்கின்றது. கடவுளின் செயல்கள் இணைத்தும் தாமாகவே அப்படியே நிகழ்கின்றன.

நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் உள்ள இடைவெளி குறையக் குறைய, நம் வாழ்வின் தொடுதலும் அடுத்தவரை நலமாக்கும்!


1 comment:

  1. இன்றைய என் மனநிலைக்கேற்றதொரு பதிவு.இயேசுவுடன் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் 'அவரைத் தொட்டனர்; நலமடைந்தனர்' எனில் இன்றைய கால கட்டத்தில் இருப்பவர்கள் அவரைத்தொடமுடியாதா ....நலமடைய முடியாதா என என்னுள் ஒரு கேள்வி எழுகிறது.'முடியும்' என்ற நம்பிக்கையைக் தருகிறது தந்தையின் வார்த்தைகள். நம் வார்த்தைக்கும்,வாழ்வுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையக் குறைய,நம் வாழ்வின் தொடுதல் நம்மை மட்டுமின்றி அடுத்தவரையும் நலமாக்கும் எனும் வார்த்தைகள் நம்முள் நம்பிக்கை விதைகளைத் தூவுகின்றன.
    இன்று தன்னைத்தேடிவரும் அனைவருக்கும் உடல்,உள்ள சுகமளிக்கும் 'லூர்தன்னையின்' திருநாள் என்பது தந்தையின் வார்த்தைகளுக்கு இன்னும் வலு சேர்க்கிறது.நம் இல்லங்களிலும், மருத்துவ மனைகளிலும் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இந்தத் 'தாயும்,சேயும்' சேர்ந்தே நலமளிக்க வேண்டுவோம்.எம் நம்பிக்கையை வலுவாக்கும் தந்தையின் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete