Monday, February 18, 2019

புரியவில்லையா?

இன்றைய (19 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:14-21)

புரியவில்லையா?

மாற்கு நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கொஞ்சம் மந்தமானவர்களாகவே காட்டப்படுகின்றனர். அவர்களால் இயேசுவை இறுதிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் ஒன்று சொல்ல, இவர்கள் ஒன்று செய்வதுமாகத்தான் நற்செய்தி நிகழ்வுகள் நகர்கின்றன. அதன் தொடக்கம்தான் இன்றைய நற்செய்தி வாசகம்.

'பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்' என்று இயேசு பரிசேயர், மற்றும் எரோதியரிடமிருந்த 'கபடம்' மற்றும் 'தீய எண்ணம்' குறித்து எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கின்றார் இயேசு. 'புளிப்பு மாவு' என்பது 'கபடம்' 'தீட்டு' 'தூய்மையற்ற நிலை' மற்றும் 'பழைய இயல்பு' ஆகியவற்றைக் குறிக்கு வார்த்தை என்பது எல்லா யூதர்களுக்கும் தெரியும். ஏனெனில், நல்லுறவுப் பலிகளும் தானியப் பலிகளும் செலுத்த வருகின்ற எல்லா யூதர்களும் 'புளிப்பு' சேர்க்காத மாவையே கொண்டுவர வேண்டும் என்பது லேவியர்நூல் அவர்களுக்குத் தரும் பாடம்.

இந்தப் பின்புலத்தில் அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல், 'அப்பம் இல்லை' என்று புலம்பத் தொடங்குகிறார்கள். இதை அறிந்த இயேசு அவர்களைச் சாடுகின்றார். இருக்கின்ற சில அப்பங்களை வைத்து பல பேருக்கு உணவு கொடுத்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். அப்படியிருந்தும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

வேறு வேறு இருத்தல் மற்றும் இயங்குதளங்களில் இருந்ததால்தான் சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

சீடர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இயேசு தங்களைப் புரிந்துகொள்ளாததாகக் கூட நினைத்திருக்கலாம்.

சீடர்கள் செய்த தவறு இதுதான்: 'தங்களுடன் பெரியவர் இருக்கும்போது சின்னஞ்சிறியவைகளைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர்.'


3 comments:

  1. Yes.தங்களுடன் பெரியவர் இருக்கும்போது, சின்னஞ்சிறிய வகைகள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்???
    அருமையான guidance!
    Thank you Reverend.Yesu.
    Listen, understand,act....
    Great!

    ReplyDelete
  2. "கையில் இருக்கும் வெண்ணெயை விட்டு நெய்க்கு அலைவதைப் போல" என்றொரு முதுமொழி உண்டு.இங்கே சீடர்களும் அதைத்தான் செய்வதாகச் சொல்லப்படுகிறது.'இயேசுவின் உடனிருப்பிற்கு மேல் எதுவும் தேவையில்லை'என்பதை உணராத சீடர்கள் ஒன்றுக்கும் ஆகாத விஷயங்கள் குறித்து கவலைப்படுகின்றனர்.நம் வாழ்விலும்கூட இம்மாதிரியான நிகழ்வுகளைப் பார்த்திருப்போம்.நம் கைகளில் உள்ள ஒரு பொக்கிஷம் நம் கைகளை விட்டுப்போன பின்பு தான் நாம் இழந்தது என்ன என்பதை உணருவோம்.இதை வேறு கோணத்தில் பார்த்தால் தந்தை சொல்வது போல் இயேசு தங்களைப் புரிந்து கொள்ளவில்லையென சீடர்களும் நினைத்திருக்கலாம்.இயேசுவும் சீடர்கள் தன்னைப் புரிந்து கொள்ளுமளவிற்கு தன் தளத்தை விட்டு இறங்கி வந்திருக்கலாம்.நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நமக்குக் கீழே உள்ளவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என நாம் தப்பித்துக்கொள்கிறோமே தவிர நாம் அவர்களைப் புரிந்து கொண்டோமா என்ற நம் உள்மனத்தின் கேள்விக்கு நாம் செவிமடுப்பதில்லை. ஆனாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாம் முழுமையாக இறங்கி நம்மை வெளிப்படுத்த வேண்டுமெனில் அக்காரியம் குறித்த புரிதலும்,கேட்டலும் தேவை என்றுணர்த்தும் பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete