Wednesday, June 6, 2018

முதன்மையான கட்டளை

நாளைய (7 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:28-34)

முதன்மையான கட்டளை

ஏரோதியர், சதுசேயரைத் தொடர்ந்து மறைநூல் அறிஞரும் இயேசுவைச் சோதிக்கின்றனர்.

'எல்லாவற்றிலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்கின்றனர்.

இயேசு முதன்மையான கட்டளையாகிய 'இறையன்பு' கட்டளையைச் சொன்னதோடு, பிறரன்புக் கட்டளையையும் அதே நிலையில் வைக்கின்றார்.

இறையன்பு நாம் ஊன்றியிருக்கும் வேர் என்றால், பிறரன்பு நாம் பரப்பும் கிளை.

இறைவனிடமிருந்து நாம் பெறுகிறோம். அதை பிறருக்கு கொடுக்கிறோம். பெறுதல் இல்லாமல் கொடுத்தல் சாத்தியமில்லை. பெறுதல் மட்டும் இருந்தால் தேங்கிவிடுவோம். கொடுத்தல் மட்டுமே இருந்தால் வறண்டுவிடுவோம்.

ஆக, முதன்மையானது என்பது பெறுதலையும், கொடுத்தலையும் சமன்செய்து பழகுவது.

1 comment:

  1. "முதன்மையான கட்டளை எது?" எனக்கேட்ட மறைநூல் அறிஞருக்கு "இறையன்பு" மற்றும் " பிறரன்பு" என்கிறார் இயேசு." இறையன்பு நாம் ஊன்றியிருக்கும் வேர் என்றால், பிறரன்பு நாம் பரப்பும் கிளை.".... அல்டிமேட்டாக வருகிறது தந்தையின் விளக்கம்.முதன்மையானது என்பது பெறுதலையும்,கொடுத்தலையும் சமன் செய்து பழகுவது எனில் இறைவனிடமிருந்து நாம் பெற்றதைப் பிறருக்குக் கொடுப்போம்; முகம் சுளிக்காமல் கொடுப்போம்.இனாமாகப் பெற்றதை இனாமாகவே கொடுப்போம்.அழகானதொரு குட்டிக்கவிதையாக வந்த பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete