Tuesday, June 19, 2018

வலக்கை செய்வது இடக்கைக்கு

நாளைய (20 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:1-6,16-18)

வலக்கை செய்வது இடக்கைக்கு

'வலது கை' 'இடது கை' வைத்து விவிலியத்தில் சில உருவகங்கள் கையாளப்படுகின்றன. யோனா நூலில் நினிவே நகர் மக்களைப் பற்றிப் பேசும்போது, 'அவர்கள் வலக்கை எது இடக்கை எது என தெரியாதவர்கள்' என குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

ஆக, கை உருவகம் வரும்போதெல்லாம் 'தெரிதல்' ('அறிவு') தொடர்பான பொருள்தான் அங்கே வருகிறது.

மற்றவர்களுக்கு தர்மம் செய்யும்போது வலக்கை செய்வது இடக்கைக்கு தெரிய வேண்டாம் என்கிறார் இயேசு.

நெருக்கமான கைகளுக்கே தெரியக்கூடாது என்று இங்கே சொல்வது எதைக் குறிக்கிறது?

கொஞ்சம்கூட வெளிவேடத்தனத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதே இயேசுவின் போதனையாக இருக்கிறது.


1 comment:

  1. "வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரிய வேண்டாம்" என்கிறார் இயேசு."இங்கே வெளிவேடத்தனத்திற்கு இடம் கொடுத்தலாகாது என்பதே இயேசுவின் போதனை" என்கிறார் தந்தை.ஆனால் இது நமது அருட்பணியாளர்களின் போதனையாக இருப்பதில்லையே... ஏன்? இயேசுவின் போதனையைப் பின்பற்ற வேண்டியவர்களே மக்கள் கொடுப்பதை மைக் போட்டுச் சொல்கிறார்களே ஏன்? கேட்டால் அதை விரும்பும்,எதிர்பார்க்கும் சிலரும் இருக்கிறார்கள் என்றும்,மக்கள் கொடுக்கும் பணத்திற்கு கணக்கு வைக்க வேண்டுமென்றும், சொல்கிறார்கள்.விரும்பும் சிலரைத் திருப்தி படுத்த எல்லோரையும் சங்கடப்படுத்த வேண்டுமா என்ன? இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.மனமிருந்தும்,ஆசையிருந்தும் தங்களால் கொடுக்க இயலவில்லையே என்று ஆதங்கப்படுவோரும் இருக்கலாம். இதையெல்லாம் மனத்தில் கொண்டு பங்குத் தந்தையர்கள் கொடுப்பவரை...அதை மேடைபோட்டு சொல்ல வேண்டுமென விரும்புவோரைத் திருப்தி படுத்த வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதும் என் தாழ்மையான வேண்டுகோள். செய்வார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திரியை முடுக்கி விட்ட தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete