Monday, June 18, 2018

மற்றவருக்கும் மேலாக

நாளைய (19 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:43-48)

மற்றவருக்கும் மேலாக

'அடுத்திருப்பவருக்கு அன்பு பகைவருக்கு வெறுப்பு' என்ற பழைய கட்டளையை புரட்டிப்போட்டு, தன் சீடர்கள், 'பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்' என்று போதிக்கும் இயேசு தொடர்ந்து, 'நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டுமே வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாக செய்துவிடுவதென்ன?' என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

மேலாண்மையியலில், 'வாக்கிங் தெ எக்ஸ்ட்ரா மைல்' என்ற ஒரு கருத்தியில் உண்டு.

மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது இக்கருத்தியல்:

முதல் வகை மனிதர்கள் தங்கள் எல்கை வரை கூட நடக்க முயற்சிக்காதவர்கள். இவ்வகை மனிதர்கள் தங்கள் அன்பை தங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள். அடுத்தவர்களை அன்பு செய்ய மாட்டார்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள் தங்கள் எல்கை வரை நடந்து எல்கையைத் தொட்ட திருப்தி கொள்பவர்கள். இவர்கள் தங்களையும் அன்பு செய்வார்கள். தங்களை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்வார்கள். அன்பிற்கு அன்பு. பகைக்குப் பகை.

மூன்றாம் வகை மனிதர்கள் தங்கள் எல்கையைத் தாண்டிச் செல்பவர்கள். இவர்கள் தங்களையும் அன்பு செய்து, தங்களை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்து, இறுதியில் எல்லாரையும் தங்கள் அன்பால் தங்களோடு இணைத்துக்கொள்ள முயல்வார்கள்.

இந்த மூன்றாம் வகை மனிதர்களே 'எக்ஸ்ட்ரா மைல்கல் நடப்பவர்கள்'

இவர்களால் இது எப்படி முடியும்?

தங்கள் வரையறை, தங்கள் வாழ்க்கையை தாங்கள்தாம் முடிவுசெய்யவேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் இவர்கள்.

'வானகத் தந்தையின் நிறைவை' அளவுகோலாக சீடர்கள் வைத்துக்கொண்டால் அவர்கள் தங்கள் எல்லைகளை எளிதாகக் கடந்துவிடுவர்.

ஆக, இன்று நான் அடுத்தவரைப் போல இருப்பதில் மட்டும் நிறைவு கொள்கிறேனா? அல்லது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அடி எடுத்து வாழ முயல்கிறேனா?


1 comment:

  1. ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள வாசகமே எதிர்பார்ப்பைத்தரும் ஒரு பதிவு. தங்களை மட்டுமே அன்பு செய்யத்தெரிந்த முதல் வகை மனிதர்கள்; தங்களையும்,தங்களை நேசிப்பவர்களையும் அன்பு செய்யும் இரண்டாம் வகை மனிதர்கள்;தங்களையும்,தங்களை அன்பு செய்பவர்களையும் அன்பு செய்து இறுதியில் தங்கள் அன்பால் எல்லோரையும் இணைக்கத்தெரிந்த மூன்றாம் வகை மனிதர்கள். இவர்களில் இந்த மூன்றாம் வகை மனிதர்களையே " வாக்கிங் த எக்ஸ்ட்ரா மைல்" பட்டத்திற்குத்தகுதி உள்ளவர்கள் என்கிறார் தந்தை.ஏனெனில் இவர்கள் " வானகத் தந்தையின் நிறைவை" அளவு கோலாக வைத்துக்,கொள்பவர்களாம். யோசிக்கிறேன்...ஏன் எனக்கென்ன குறைச்சல்? என்னாலும் கூட "எக்ஸ்ட்ரா அடி" எடுத்து வைக்க முடியாதா என்ன?! ஒருவரை உசுப்பேத்திவிட்டால் எதுவுமே சாத்தியம்...இதை நிருபிக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete