Wednesday, June 13, 2018

கடைசிக் காசு

நாளைய (14 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:20-26)

கடைசிக் காசு

'கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்கிறார் இயேசு.

'காசு' என்பது கிரேக்க மூலத்தில் 'குவாத்ராடெஸ்' (அதாவது 64ல் 1 என்று கொடுக்கப்பட்டுள்ளது). நேற்று திருச்சி சிறையில் இருந்து 10 கைதிகள் நன்னடத்தைக்காக விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி வந்தது. அதாவது ஒருவரின் நன்னடத்தை சட்டத்தின் பார்வையில் அவருக்கு விடுதலையைப் பெற்று தருகிறது. அவர் விடுதலை பெறுவது மட்டுமல்லாமல் அவர் செலுத்த வேண்டிய பிணையிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றார்.

அதாவது, எதிரியோடு சமரசம் செய்து கொள்ளாமல் விட்டால் அவர் நம்மை நடுவரிடம் கையளிக்க கடைசிக் காசு மட்டும் நாம் விடுதலை செய்யப்படமாட்டோம் என்கிறார்.

சமரசம் இரக்கத்தைவிட மேலானது என்கிறார் இயேசு.

சட்டம் யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை. அது 64ல் 1 என்ற அளவில் மிக சிறிய அளவாக இருந்தால் கூட. ஆனால், பிரச்சினையை வெளியே சமரசம் செய்துவிட்டால் நாம் பிரச்சினையிலிருந்து தப்பிவிடலாம். இதற்குத் தேவை கொஞ்சம் கவனமும், நிறைய வேகமும்.

வழியிலேயே எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டும்

ஒருவேளை எதிரி காலில் விழச் சொன்னால்?
அல்லது வழியில் நம்மை அடித்தால்?
அல்லது நம்மை அவமானப்படுத்தினால்?

எல்லாவற்றையும் பொறுத்து சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சமரசம் செய்யாமல்போhனால் வரும் விளைவு இதைவிட கொடுமையாக இருக்கும்.

இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

அந்தந்த நேரத்திற்கு உரியதை அந்தந்த நேரத்திற்குள் செய்துவிட்டால் நாம் நாளை நடக்கவிருப்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நம்ம ஊர் வழக்கப்படி புரிந்துகொள்ளவேண்டுமென்றால்,

நாம் சுமக்கும் கடைசிக் காசு நாம் இறந்தபின் நம் நெற்றியில் வைக்கப்படும் காசுதான்.

எதிரியுடன் சமரசம் செய்துகொள்ளாதபோது அது நம்மை அழித்துவிடும் அல்லது கடைசிக்காசு நிலைக்குக் கொண்டுவந்துவிடும். இல்லையா?

1 comment:

  1. நம் எதிரியுடனான பிரச்சனையிலிருந்து நாம் விடுபட கொஞ்சம் கவனமும்,வேகமும் தேவை என்கிறார் தந்தை.எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சமரசம் செய்ய வேண்டும் என்பதற்குக் காரணம் ,சமரசம் செய்யாவிட்டால் விளைவு கொடுமையாக இருக்கலாம் என்கிறார் தந்தை.ஆனால் என் பார்வையில் நம்மிடமிருந்து பறிபோய்விட்ட மனநிம்மதியைத் திரும்பப்பெற எதை வேண்டுமானாலும் பணயம் வைக்கலாம்.உண்மைதான்....அந்தந்த நேரத்திற்கு உரியதை அந்தந்த நேரத்திற்குள் செய்துவிட்டால் நாம் நாளை நடக்கவிருப்பதைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை... உண்மைதான்.ஆனால் அந்த இறுதிவரிகள்தான் என்னவென்று எனக்குப்புரியவில்லை.எதிரியுடன் சமரசம் செய்யாதபோது நம் கடைசிக்காசையும் இழந்து விடுவோமா? அது தெரிந்ததுதானே! பின் என்ன! அது என்ன நெற்றிக்காசு? தந்தைக்கே வெளிச்சம்!

    ReplyDelete