Thursday, October 6, 2016

பூட்டி வைக்க

'திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து
அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.
அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிட கேடுள்ளதாகும்.'
(காண். லூக்கா 11:15-26)

நாம நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற அன்னைக்குதான் நல்லா இருக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

விரதம் இருக்கணும்னு நினைக்கிற நாளில் பசிக்கும்.

சினிமா போகக்கூடாதுன்ன நினைக்கிற நாளில் நண்பன் சினிமாவுக்கு அழைப்பான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நாளைய நற்செய்தியில் இயேசு சொல்வதும் இப்படித்தான் இருக்கின்றது.

வீட்டைவிட்டு வெளியேறுகிறது தீய ஆவி ஒன்று.
போன ஆவி சுற்றுகிறது எல்லா இடமும்.

இதற்கிடையில் தீய ஆவி பிடித்திருந்த நபர் வேகமாக தன் வீட்டை சுத்தமாக்குகின்றார்.

ஆனால் அவர் செய்த ஒரு தப்பு என்னன்னா வீட்டை சுத்தமாக்கியவர் அப்படியே திறந்து போடுகின்றார். திறந்த வீடு கூட்டியிருப்பதைக் காண்கிறது ஓடிப்போன தீய ஆவி.

போய் தன்னைவிட பொல்லாத ஏழு ஆவிகளை அழைத்துக் கொண்டு வந்து குடியேறுகிறது.

ஆக, தீமையை நம்மிடமிருந்து வெளியேற்றுவது மட்டும் போதாது.

உடனடியாக நம் வீட்டைப் பூட்டி வைக்க வேண்டும்.

கூட்டி வைக்கும் நேரத்தில் பூட்டி வைப்பதையும் மறக்க வேண்டாமே!

3 comments:

  1. பூட்டியுள்ள தோட்டம் நீ; இனிமைமிகு பாடல் 4:12

    இதுதானா அதுக்கு அர்த்தம் ??

    ReplyDelete
  2. Amen... importance of locking up after cleaning is explained crystal clear..Thanks fr.

    ReplyDelete
  3. வாழ்க்கையோடு தொடர்பு படுத்தக்கூடியதொரு பதிவு.ஒருமுறை ஒரு பாத்திரம் நிறைய பாலைக்காய்ச்சி மூடிவைக்க மறந்ததன் விளைவு சிறிது நேரத்தில் ஒரு கொசு அதில் விழுந்து இறந்து கிடக்க அத்தனை பாலையும் கீழே கொட்ட வேண்டியதாயிற்று.இன்றையப்பதிவு எனக்கு அந்த நிகழ்வைத்தான் ஞாபகப்படுத்தியது. சும்மா இருந்தாலும் இருப்போம்...ஆனால் என்று ஒரு நல்லது செய்ய வேண்டுமென மனத்தை தயார்படுத்துகிறோமோ அன்றைக்குத் தான் படையெடுக்கின்றன அதற்கு நேர்மாறான அத்தனை நிகழ்வுகளும், எண்ணங்களும். உப்பு விற்கப் போகையில் மழையையும்,பஞ்சு விற்கப்போகையில் காற்றையும் சந்தித்தவன் கதையாகி விடுகிறது நம் நிலமை.தீமையை நம் மனத்திலிருந்து விரட்ட எடுக்கும் சிரமத்திற்குப் பலன், அதில் எந்த எந்த காத்தோ,கருப்போ நுழையாமல் பார்த்துக்கொள்ளும்போது தான். ஆகவே ஒருமுறை விட்ட தீய பழக்கங்களின் சுவடு கூட தெரியாமல் பார்த்துக்கொள்வது அந்தப் பழக்கங்களை விடுவதை விட சிரமம் என்று புரிகிறது.முயன்றால் முடியாதது என்று ஒன்றில்லை." கூட்டி வைக்கும் நேரத்தில் பூட்டி வைப்பதையும் மறக்க வேண்டாமே!"... அழகான சிலேடை. வாழ்க்கையின் அர்த்தமே இது போன்ற சிறிய விஷயங்களில் தான் அடங்கியுள்ளது.....புரிய வைத்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete