Friday, October 21, 2016

குழந்தைகளைப் போல

'இனி நாம் குழந்தைகளைப் போல இருக்கக் கூடாது'

(காண். எபேசியர் 4:7-16)

குழந்தைகள் பற்றிய உருவகங்கள் பவுலின் மடல்களில் நிறையக் காணக்கிடக்கின்றன.

'பால் குடித்தல்,' 'திட உணவு உண்ணுதல்,' 'பிரம்பால் அடித்தல்,' 'குழந்தைகளைப் போல இருத்தல்' என நிறைய சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார் பவுல்.

எதற்காக குழந்தைகள் போல இருக்கக் கூடாதாம்?

குழந்தைகள் யாராலும் எளிதாக திசைமாற்றப்படக்கூடியவர்கள்.

அப்படி தவறான போதனைகளால் எபேசு நகர மக்கள் திசைமாறிச் செல்லக்கூடாது என்பதுதான் பவுலின் கவலையாக இருக்கின்றது.

2 comments:

  1. “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு 18:3

    ஒரே குழப்பமா இருக்கே

    ReplyDelete
  2. ' எடுப்பார் கைப்பிள்ளை' எனும் சொலவடையைக் கேட்டிருப்போம்.இது தம்மை நோக்கி கைநீட்டும் எவரிடமும் தாவிச்செல்லும் குழந்தைகளை மட்டுமின்றி,தனக்கென ஒரு சுயசிந்தனை இல்லாமல் அடுத்தவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுப்பவர்களையும் குறிப்பதாகும்.ஆங்கிலத்தில் 'childish' மற்றும் 'child-like' எனும் வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.இதில் முன்னது நாம் எப்படி இருக்கக்கூடாது என்பதைக்குறிக்கும் எதிர்மறை வார்த்தை.அவர்,இவர் என்று எவர் எதைச்சொல்லிடினும் அதை நம் செவிகளால் மட்டுமே வாங்கிக்கொண்டு நம்மனத்தின் முடிவை செயல்படுத்துவதே ஒருவன் குழந்தைப் பருவத்திலிருந்து 'முதிர்ச்சி' அடைந்து விட்டான் என்பதற்கு அடையாளம் என்பதைச் சொல்ல வருகிறது இன்றைய பதிவு. சில வார்த்தைகளால் பலவற்றைச் சொல்ல முயற்சித்திருக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete