Saturday, October 15, 2016

ஓயாமல்

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 18:1-8) 'நேர்மையற்ற நடுவனும், ஏழைக் கைம்பெண்ணும்' என்ற எடுத்துக்காட்டை இயேசு சொல்கிறார்.

கடவுளுக்கும் அஞ்சாத, மனிதர்களையும் மதிக்காத ஒரு நடுவரிடம், ஏழைக் கைம்பெண் ஒருவர் நீதிகேட்டு நாடிச் செல்கின்றார்.

நடுவரைத் தேடி எத்தனை முறை போயிருப்பார் இந்தக் கைம்பெண்?

சொல்லப்படவில்லை.

இந்தக் கைம்பெண்ணின் விடாமுயற்சியை பாராட்டுகின்றார் இயேசு.

நீதி மறுக்கப்பட்டவர்கள், தனக்கென்று வேறு எதுவும் இல்லாத நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாடிச்செல்வார்கள் என்பது வரலாற்றின் சான்று.

தீண்டாமையை எதிர்த்து போரிட்ட அம்பேத்கர்.

விடுதலைக்காக போரிட்ட நம் முன்னோர்கள்.

தங்கள் இலக்கு நிறைவேறும் வரை அவர்கள் ஓயவில்லை.

இன்று என் இலக்கு என்ன?

அதை நோக்கி நான் ஓயாமல் ஓடுகின்றேனா?

அல்லது பாதியிலேயே விட்டுவிடுகிறேனா?

1 comment:

  1. வாசிப்பவர்களின் நெற்றியில் சுத்தியல் கொண்டு அடித்தது போன்றதொரு கேள்வி கேட்கிறார் தந்தை.எத்தனை நாளைக்கு நம் முன்னோர்களின் சாதனைகளைப் பேசிப்பேசி அதில் நாம் குளிர் காயப்போகிறோம்? நம்மில் எத்தனை பேர் நம் இலக்கு என்னவென்று யோசிக்காமல் சொல்ல முடியும்? அப்படியே ஒன்று இருப்பினும் அதை சாதித்துக் காட்ட எப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறோம்? இதுவரை இல்லை எனினும் பரவாயில்லை.காலம் கடந்து விடவில்லை.இன்றே,இப்பொழுதே ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்வது மட்டுமின்றி அதன் எல்லையைத்தொட்டுவிடும் முயற்சியில் ஓட ஆரம்பிப்போம். ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவ நேரிடலாம்.ஆனால் துவண்டு விடத்தேவையில்லை.இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் அந்தக் கைம்பெண்ணை நம் முன்னிறுத்துவோம்.இந்ந முயற்சியில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நல்ல விஷயங்களுக்கு 'கிரியா ஊக்கி'யாய் நின்று ஊட்டம் கொடுக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete