Wednesday, October 5, 2016

நள்ளிரவில்

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 11:5-13) இயேசு இறைவேண்டலில் அவசியமான கூறான விடாமுயற்சி பற்றி அறிவுறுத்துகின்றார்.

நள்ளிரவில் தன் நண்பனின் கதவைத் தட்டும் நண்பனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

நட்பின் பொருட்டு எழுந்திருக்காத நண்பன் தொந்தரவின் பொருட்டு எழுந்திருக்கிறான்.

இந்த செல்ஃபோன் காலத்தில் ஒருவர் நம் ஃபோனை எடுக்கவில்லை எனில், தொடர்ந்து அவருக்கு அடித்துக் கொண்டே இருந்தால் அவர் எடுப்பார் அல்லது ஒரேயடியாக அவர் செல்ஃபோனை அணைத்துவிடுவார் என்று ஏபிசி சர்வே சொல்கிறது.

நல்லது செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நட்பு அல்லது தோழமை. இரண்டு, தொந்தரவு.

இறைவனைப் பொறுத்தவரையில் அவர் நல்லது செய்வது முதல் காரணத்தால்தான்.

பூட்டிய கதவுக்கு உள் இருக்கும் நண்பனுக்கு என்ன பிரச்சினை?

எழுந்திருக்க வேண்டும்.

கதவைத் திறக்க வேண்டும்.

பிள்ளைகளும் தொந்தரவு செய்யப்படுவார்கள்.

கடவுளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை.

அவர் எப்போதும் எழுந்து நின்றுகொண்டே இருக்கின்றார்.

அவரின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

எந்தப் பிள்ளைக்கும் தொல்லை இல்லை.

'இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதுமில்லை!' (திபா 121)

2 comments:

  1. இன்றையத் தேவைக்கேற்றதொரு அழகான பதிவு. நள்ளிரவில் ஒரு உதவிக்காகக் கதவைத் தட்டிய நண்பனுக்கு நட்பின் பொருட்டு உதவி செய்யவில்லை எனினும் தொந்தரவின் பொருட்டு உதவி செய்கிறான் ஒருவன்.இப்படிப்பட்ட நண்பர்களை நம்பித்தான் நம்மில்பலபேர்வாழ்க்கையைஓட்டிக்கொண்டிருக்கஇறோம்..எங்கெங்கோ தேடுகிறோம்; தட்டுகிறோம்; கேட்கிறோம்.பல நேரங்களில் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.கால,நேரம் பாராது எப்பொழுதுமே நமக்காகத் திறந்து வைத்திருக்கும் இறைவனின் இதயக்கதவுகளைத் தட்டுவோம்; நம் இன்றையத் தேவைகள் என்னவென்று தேடுவோம்; அவைகள் நிறைவேற அவரின் கருணையை இறைஞ்சுவோம்.இன்று கிடைக்காமல் போகலாம்; நாளையும் கிடைக்காமல் போகலாம்.ஆனால் நாம் கேட்பதற்கு முன்னே நம் தேவைகள் இன்னதென்று அறிந்திருக்கிற தேவன் தக்க காலத்தில் நம் குரலுக்கு செவிசாய்ப்பார் என நம்புவோம். ஏனெனில் திருப்பாடல் சொல்கிறது..." இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை!" நம்பிக்கையூட்டும் நல்ல வரிகளுக்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Our Lord is always ready to give us our daily bread..of his divine mercy...praise God...

    ReplyDelete