Thursday, October 20, 2016

கைதியாய்

'சகோதரர், சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாய் இருக்கும் நான் உங்களைக் கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்!'

(காண். எபேசியர் 4:1-6)

இந்த நாட்களில் எபேசியர் திருமடலை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

நாளைய முதல்வாசகத்தின் இந்த தொடக்கப் பகுதியை வாசித்தவுடன் என்னில் ஒரு கேள்வி எழுந்தது.

பவுலடியார் கைதியாய் சிறையில் கிடக்கிறார்.

சிறையில் இருந்து கொண்டு எழுதும் ஒருவர் வழக்கமாக என்ன எழுதுவார்?

'என்னை சீக்கிரம் பிணையில் எடுங்கள்'

அல்லது

'எனக்காக அந்த நீதிபதியிடம் பரிந்துரை செய்யுங்கள்'

அல்லது

'உங்களின் பணம் மற்றும் ஆள்பலம் கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்'

அல்லது

'வீட்டில் உள்ள என் சொந்தக்காரர்களுக்கு இதைச் செய்யுங்கள்'

அல்லது

'என் சொத்துக்களை நான் வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள்'

இப்படித்தானே சொல்லியிருக்க வேண்டும்? இதுதானே உலக வழக்கம்!

ஆனால், பவுலடியாரைப் பாருங்கள்.

தான் கைதியானதைக் கூட நேர்முகமாக, 'ஆண்டவருக்காக' என ஏற்றுக்கொள்கின்றார்.

மேலும், அந்த நேரத்திலும் தன் திருச்சபை பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

பவுலின் அர்ப்பணம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

எந்நேரமும் மற்றவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க மிகப்பெரிய மனம் வேண்டும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கண்டிப்பாக எந்நேரமும் தன் செய்கைகளால் இறைவனிடம் தனக்குள்ள பிரமாணிக்கத்தை வெளிப்படுத்த,தான் சார்ந்துள்ள திருச்சபையைப்பற்றியே கவலைப்பட,அல்லும் பகலும் மற்றவர்களைப்பற்றிய சிந்தனையிலேயே வாழ ஒரு மிகப்பெரிய 'மனம்' வேண்டும்.அது எல்லோருக்கும் வந்துவிடுமா என்ன? இல்லை...இறைவன் பால் தன்னை முற்றிலுமாகக் கையளித்து விட்ட 'அர்ப்பண உணர்வு' உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.அதைத்தான் பவுல் இங்கே செய்கிறார் தான் ஒரு கைதியாகச் சிறை வைக்கப்பட்ட நிலையிலும்.நாமும் பல சமயங்களில் சூழ்நிலைக்கைதிகளாகிறோம்.அப்பொழுதெல்லாம் நம் மனத்தில் எழுவது என்ன? சுயபச்சாதாபமாஇல்லை...நம்மைப்படைத்தவரையும்,நம்மைச்சுற்றியுள்ள நம் சகோதர்ர்களையும் பற்றிய சிந்தனையா? யோசிப்போம்.' அர்ப்பண வாழ்வு' பற்றிய சிந்தனையைத்தூண்டி தூண்டிவிட்ட தந்தைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete