Tuesday, October 4, 2016

மெல்லியது

நாம் நிறைய நேரங்களில் ஜென்டில்மேன்(உமன்) ஆக அல்லது டிப்ளமட்டிக்காக இருக்க விரும்புகிறோம்.

ஜென்டில்மேன் அல்லது டிப்ளமேட்டிக்காக இருப்பது என்பது யாரையும் காயப்படுத்தாமல் பேசுவது, பழகுவது என்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி பதிவு செய்கிறது.

யாரையும் காயப்படுத்தாமல் இருக்க முடியுமா? பழக முடியுமா?

முடியாது என்கிறது நாளைய முதல் வாசகம் (காண். கலா 2:1-2, 7-14).

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தை நாம் இந்நாள்களில் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

தனக்கும் பேதுருவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி மனம் திறக்கின்றார் பவுல்.

பேதுருவைப் பொறுத்தவரையில் தான் செய்தது டிப்ளமட்டிக்கான செயல்.

அதாவது, யூதர்கள் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும், புறவினத்தார் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும் இருக்கின்றார்.

ஆனால், பவுல் மிகவும் கட் அன்ட் ரைட் ஆக இருக்கிறார்.

ஒன்று இந்தப் பக்கம். அல்லது அந்தப் பக்கம்.

டிப்ளமட்டிக்காக இருப்பதை வெளிவேடம் என்கிறார் பவுல்.

டிப்ளமட்டிக் - வெளிவேடம். இந்த இரண்டிற்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியது.

1 comment:

  1. 'Hypocrisy'....இதற்கு 'வெளிவேடம்' என்பதை விட 'நேரத்திற்குத் தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்ளுதல்' என்ற வார்த்தை இன்னும் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். இதைப் 'பச்சோந்தித்தனம்' என்று கூட சொல்லலாம்.இப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக மாற்ற வல்லவர்கள்; அடுத்தவரைப்பற்றிய கவலை சிறிதுமின்றி தங்களது உணர்வுகளை மட்டுமே பெரிதாக நினைப்பவர்கள்.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பவுலின் நிலமையைத்தான் இங்கு பதிவு செய்துள்ளார் தந்தை.இன்றைய வாசகம் முழுவதுமே பேதுருவின் நிலைப்பாடு குறித்த ஏமாற்றம் பவுலின் புலம்பலாக ஒலிக்கிறது.என்னதான் பேதுரு திருச்சபையின் தலைவர் எனினும் அவரும் மனிதர்தானே!இப்படிப்பட்டவர்களையும் சகித்துக் கொண்டு போவதுதான் வாழ்க்கை என்கிறது இன்றையப்பதிவு.'அடுத்தது காட்டும் பளிங்கு போல்' உள்ளவர்களுக்கோ,இல்லை எதுவரினும் நாம் இப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களுக்கோ வாழ்க்கை எப்பொழுதுமே கை கொடுப்பதில்லை.ஆனால் இதையும் தாண்டி நம் விறுப்பு- விறுப்புக்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்திருப்பவர்களையும்,அவரது செயல்களையும் சகித்துக்கொண்டு போவதும் கூட ஒரு 'கலை'தான்.இப்படிப்பட்டவர்கள் தான் வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள்.இதைத்தான் ' டிப்ளோமசி' என்கிறார் தந்தை.அதனாலென்ன....அடுத்திருப்பவருக்கு மகிழ்ச்சி தருமெனில் அதையும் தேவைப்படும்பொழுது கொஞ்சம் தொட்டுக்கொள்வோமே! இன்றைய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விஷயங்களை விவிலியத்தின் மேற்கோளுடன் விளக்கியுள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete