Monday, October 10, 2016

மருந்து

நற்செய்தி நூல்களில் 'உள்புறம்,' 'வெளிப்புறம்' பற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் இயேசு பரிசேயரிடம் 'உள்புறத்தை தூய்மையாக்குங்கள்' என்று வலியுறுத்துகின்றார்.

ஆனால் நாளை நாம் வாசிக்கும் லூக்கா நற்செய்தியாளரின் பதிவு (11:37-41) சற்று வித்தியாசமாக இருக்கிறது.

'உள்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.'

இதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன்னால் வாசிக்க வேண்டும்.

'உங்கள் உள்ளத்தில் பேராசையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.'

பேராசைக்கு மருந்து தர்மம் செய்தல்.

அதாவது, எல்லாம் எனக்கு என்று வைத்துக் கொள்வதை விடுத்து, எல்லாம் உனக்கு என்று கைதிறக்கும் மனநிலை.

தர்மம் தொடங்கினால் பேராசையும் மறைந்துவிடும். தர்மத்தை தொடங்க தேவை நன்மை.

1 comment:

  1. கையளவு குப்பிக்குள் 'உயிர் காக்கும் ' மருந்து.அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது இன்றையப்பதிவை. பேராசையும் தீமையும் குடிகொண்ட மனது தூய்மையிலிருந்து வெகு தூரம் இருக்கிறது.இதற்கு மாற்று மருந்தாக உட்புறத்தில் உள்ளவற்றைத் தானமாகக் கொடுக்க நம்மை அறிவுறுத்துகின்றன இயேசுவின் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள்.' தர்மம்' என்பதன் பொருள் "எல்லாம் எனக்கு என்று வைத்துக்கொள்வதை விடுத்து, எல்லாம் உனக்கு என்று கைதிறக்கும் நிலை" என்று கூறுகிறார் தந்தை.வாசிப்பதற்கே அழகாகத் தோன்றும் இந்த வரியை நாம் செயலில் காட்டுவது அத்தனை எளிதல்ல." தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்." எங்கோ கேட்ட வரிகள் அது எளிதுதான் என்று சொல்கின்றன.விழாக்களின் நேரம் இது. நம்முடைய மகிழ்ச்சியைத் தக்க வைக்க பிரயத்தனப்படும் இந்நேரத்தில் நம் உட்புறத்தில் உள்ளவற்றைத்( அருள்,பொருள் எதுவாயினும்) தேவையிலிருப்பவரோடு பகிர்ந்து கொண்டால் நாமும் தூய்மையடைவோம் என நம் மனத்திரியைத் தூண்டிவிடும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete