Wednesday, June 11, 2014

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்!

இன்று நம் அனிச்சம் வலைப்பூவிற்கு முதல் பிறந்த நாள். 'இனி எல்லாம் சுகமே!' என்று தொடங்கிய பயணம் இனிதாக முதல் மைல்கல்லைத் தொட்டுள்ளது.

'பாதை மாறுவதே என் பயணமாகிப் போனது!' என்று அடிக்கடி சொல்வார் என் நண்பர் ஜூலி.

விவிலியத்தில் தொடங்கி, உளவியல், சமூகவியல், சினிமா, நாடகம், புத்தகம், வெளிநாடு, கடவுள், நாத்திகம், கம்மல், காதல், கொலுசு என எல்லாம் பேசியாயிற்று.

இந்த ஆண்டு முழுவதும் என்னோடு உடன் பயணித்த உங்களுக்கும், உங்கள் கண்களுக்கும் நன்றி!

திபா 65 அறுவடை காலத்துத் திருப்பாடல்.

தானியங்களை விளையச் செய்தீர்.
தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்.
கரையோர நிலங்களை மென்மையாக்கினீர்.
வளமைக்கு ஆசி வழங்கினீர்.
பாலை நிலத்தில் மேய்ச்சல்.
குன்றுகளில் அக்களிப்பு.
புல்வெளி போன்ற ஆடைகள்.

'ஆண்டு முழுவதும் நலன்களால் நிறைத்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி!'



2 comments:

  1. மனமுவந்த பாராட்டுக்கள் தந்தையே! தங்களின், ஓராண்டு கால உழைப்பிற்கும்,தங்களது ஒரு வயது குழந்தைக்கும்! அழகான,மேன்மையான பங்கைத் தேர்ந்தெடுத்துள்ள தாங்கள் எத்துணையோ நிலங்களில் விதைகளைத் தெளித்துள்ளீர்கள். எல்லாமே நல்ல நிலங்களா?...கேள்விக்குறிதான்்ஆனாலும் தெரிந்தும் தெரியாமலும்,புரிந்தும் புரியாமலும் எங்களுக்குள் சென்ற விதைகள் அதன் பலனை எங்களுக்கு மட்டுமல்ல,தங்களுக்கும் சேர்த்தேதான் கொடுக்கக் காத்திருக்கின்றன.இறைவன் தங்களையும்,தங்கள் படிப்பையும்,தங்களின் குருத்துவத்தையும்,அனைத்து முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக. பரிசுத்த ஆவி தம் கொடைகளோடு உங்கள் மேல் நிழலிடுவாராக.தொடருட்டும் தங்கள் பணி முன்னை விட அதிகத் தெம்போடு.மீண்டும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. பயணம் தொடர வாழ்த்துகள்!!!

    இனி எல்லாம் சுகமே......

    ReplyDelete