Friday, August 6, 2021

உண்டு நிறைவுகொள்ளும்போது

இன்றைய (7 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (இச 6:4-13)

உண்டு நிறைவுகொள்ளும்போது

'நிறைவுகொள்வது' என்பது நல்ல உணர்வு. அதாவது, 'நான் இருக்கும் இடத்தில், நான் இருக்கும் நிலையில் நான் நிறைவாக இருக்கிறேன்' என்ற உணர்வுகொள்வது நல்லது. ஆனால், இந்த உணர்வு ஒரு தேக்கநிலையை உருவாக்கிவிட்டால் அது தவறு.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அப்படி ஒரு தேக்கநிலையை அடைந்துவிடக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் மோசே. 'இஸ்ரயேலே, செவிகொடு!' என்று முதன்மையான அன்புக் கட்டளையை வழங்குகின்றார் மோசே. தொடர்ந்து, 'உன் கடவுளாகிய ஆண்டவர் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் உன்னைப் புகச்செய்யும்போது, நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போது, நீ உண்டு நிறைவுகொள்ளும்போது, அடிமைத்தனத்திலிருந்து உன்னை அழைத்து வந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாக இரு!' என எச்சரிக்கின்றார்.

ஆண்டவரை மறக்கும் நிலை எப்போது வரும்?

மேற்காணும் ஆசீர் அனைத்தும் தன் உழைப்பால் மட்டுமே வந்தது என்ற பெருமித உணர்வு கொள்ளும்போது.

கொடுத்தவரை மறந்துவிட்டுக் கொடைகளை மட்டும் பற்றிக்கொள்ளும் போது.

எனக்கு இது போதும்! இது மட்டும் போதும்! என்னை நானே சுருக்கிக்கொள்ளும்போது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வலிப்பு நோயினால் துன்புற்ற ஒரு குழந்தையைக் குணமாக்கச் சீடர்களால் இயலவில்லை. அவர்களைக் கடிந்துகொள்கின்ற இயேசு அந்தக் குழந்தைக்கு நலம் தருகின்றார்.

'உங்கள் நம்பிக்கைக்குறைவினால்தான் இது உங்களுக்கு இயலவில்லை' என்கிறார் இயேசு.

நம்பிக்கைக்குறைவு வரக் காரணம் இயேசு தங்களோடு இருக்கின்றார் என்ற தேக்கநிலையே.

ஆன்மிக வாழ்விலும் தேக்கநிலை வரலாம்.

நன்றாகக் கூட்டி வைக்கப்பட்ட இல்லம் போல இருக்கின்ற ஆன்மிக வாழ்வில் திடீரென ஏழு பேய்கள் வந்துக் குடியிருக்கவும் வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றார் இயேசு.

தேக்கநிலையிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும்?

தொடர்ந்து வளர வேண்டும்

4 comments:

  1. காலை துயிலெழுந்தது முதல் இரவு கண் மூடும் வரை எத்தனையோ ஆசீர்வாதங்கள் நம்மை நோக்கி வருகின்றன….மனிதர்கள் வரவில்…..பொருட்களின் வடிவில்! அத்தனைக்கும் என்னைத் தகுதியாக்கியவர் “அவர்தான்” என்று நினைத்தால் அது “நிறைவு.” இல்லையேல்….??

    “ நம்பிக்கை” என்பது ஒரு மலையையும் இடம்பெயரச் செய்யும் சக்தி படைத்தது என்பது ஒரு பக்கம்; அது இல்லையேல் சீடர்களால் ஒரு வலிப்பு நோயைக் கூட குணமாக்க இயலவில்லை என்பது மறுபக்கம்.இதற்குக் காரணம் தேக்க நிலை என்கிறார் தந்தை. இயேசு தங்களுடன் இருக்கிறார்…அவர் பார்த்துக்கொள்வார் எனும் over confidence ஆகவும் இருக்கலாம். “நல்லதும் வேண்டாம்…தீயதும் வேண்டாம்” என்று இருப்பது தீயது செய்வதை விட மோசமானது என்ற உணர்வைத் தருகின்றது இன்றைய வாசகம். ஏழு பேய்கள் வந்து குடியிருக்கத் தகுதி படைத்த ஒரு இடம்! அது எப்படி இருக்கும்!? நினைக்கவே அஞ்சத்தக்க விஷயம். இப்படி ஒரு செயல் நடப்பதைத் தடுக்கத் தொடர்ந்து இறைவனில் வளர வேண்டுமென்கிறது விவிலியம்!

    சின்னச் சின்ன வரிகளில் பெரிய பெரிய விஷயங்களத் தரும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Super reflection father. I will grow everyday to keep alive in my spiritual life.

    ReplyDelete