குருட்டு வழிகாட்டிகளே
இன்று நாம் பேசும் அனைத்து வார்த்தைகளும் 'பொலிட்டிக்கலி கரெக்ட்டாக' இருக்க வேண்டும். 'குருட்டு வழிகாட்டிகள்' என்று சொல்வது கூட பார்வையற்றவர்களைத் தவறாகப் பேசுவது போல ஆகிவிடும். 'கண்களைக் கட்டிக்கொண்டு வழிகாட்டுவது போல' அல்லது 'பார்வையற்றோர் வழிகாட்ட முயற்சி செய்வது போல' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறைநூல் அறிஞரையும், பரிசேயரும், 'குருட்டு வழிகாட்டிகளே' என்று சாடுகின்றார். 'வழியும் தெரியாமல் வழி தெரிந்த போல' வழிகாட்டுவதும், அல்லது 'வழி தெரிந்தும் நடக்க இயலாமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதுமே' இந்த நிலை.
இது மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையிலும், நம் வாழ்க்கையை நாம் மேலாண்மை செய்யும் நிலையிலும் இது நேரலாம்.
இலக்கு தெளிவில்லாமல் நாம் நகரும் ஒவ்வொரு நொடியும் தொடங்கிய இடத்திலேயேதான் நிற்கின்றோம்.
குருட்டு வழிகாட்டிகள்! தந்தையின் கூற்று சரிதான்! பாதை தெரியாத ஒருவன் பாதசாரிகளுக்கு வழி காட்டும் முயற்சி. “Blind leading the blind”….. எம் மொழியில் சொல்லிடினும் பொருள் ஒன்று தான். கருத்து சிறிதெனினும் காரமானது. “சேரும் இடமும், போகும் வழியும் தெரிந்திடின் நாம் யாருக்கும் வழிகாட்டலாம்”….எனும் கருத்தை எடுத்து வைக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteAmen!
ReplyDelete