Tuesday, August 24, 2021

வெள்ளையடித்த கல்லறைகள்

இன்றைய (25 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 23:27-32)

வெள்ளையடித்த கல்லறைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மீண்டும் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார். இயேசுவின் காலத்துக்குப் பின்னர் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களைப் பல நிலைகளில் துன்புறுத்தினர். இதன் பின்புலத்தில்தான் இயேசுவின் சாடுதலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' என்ற சொல்லாடலை நாம் இரு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, உள்ளே ஒன்றும் வெளியே இன்னொன்றுமாக இருப்பது. இரண்டு, வெளியே தூய்மையாக இருந்துகொண்டு உள்ளே அழுக்குகளால் நிறைந்திருப்பது.

முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:9-13) பவுல் தன் நேர்மையான வாழ்வு பற்றி தெசலோனிக்க நகர் மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். உள் ஒன்றும், புறம் வேறும் என்ற மனநிலை பவுலிடம் இல்லை.


1 comment:

  1. நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்திய பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள்! இவர்களை சாடும் இயேசு! வெளியே தூய்மையாக இருந்து கொண்டு உள்ளே அழுக்காக இருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம்……எதையாவது ஊற்றிக்கழுவி விடலாமென்று.ஆனால் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக இருப்பது மிக ஆபத்து.என்ன இருக்குண்ணே நமக்குத் தெரியாது. இவர்கள் தான் நாம் தள்ளியே இருக்க வேண்டிய “ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்”! நாமும் உஷாராக இருப்போம்…நம்மை யாரும் அப்படி அழைக்க இடம் கொடாதபடி!

    நல்லதொரு எச்சரிக்கையைத் தாங்கி வரும் பதிவு! புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete