Wednesday, August 9, 2017

லாரன்ஸ்

நாளை தூய லாரான்ஸின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உரோம் நகரின் முதல் மறைசாட்சி இவர்.

நாளைய தினம் உரோமில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம் லாரன்ஸ் அடுப்பில் வதைக்கப்பட்டு இறந்ததுதான் என்பர் பெரியவர்கள்.

மறைசாட்சியம் - இன்று வரை என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒரு வார்த்தை.

குருமாணவப் பயிற்சியின் தொடக்ககாலத்தில் எனக்கு புரியாத புதிராக இருந்தது மறைசாட்சியம் என்ற வார்த்தை.

இந்து மரபில் மறைசாட்சியம் என்பது இல்லை. இந்து மறைக்காக யாரும் சாட்சியாக இறந்ததில்லை. இந்துமதம் யாரையும் அப்படிக் கொண்டாடுவது இல்லை.

இவ்வளவு ஏன்? ஒருவர் அடுத்தவருக்காக இறப்பது என்ற கான்செப்டே அங்கே இல்லை. ஆகையால்தான் மறைசாட்சியம் எனக்குப் புரியவில்லை.

இருக்கும்போது பிறருக்காக இருக்கும் நாமும் மறைசாட்சிகளே!

2 comments:

  1. Anonymous8/10/2017

    good morning Yesu. இருக்கும்போது பிறருக்காக இருக்கும் நாமும் மறைசாட்சிகளே. Lovely yesu.

    ReplyDelete
  2. சிறிய குப்பிக்குள் சிறந்த மருந்து போல் அமைந்துள்ளது தந்தையின் வார்த்தைகள்." எனக்காகத்தன் வாழ்வை இழப்பவன் அதை பல மடங்கு பெற்றுக்கொள்வான்." கிறித்துவத்துக்கே உரித்தான வார்த்தைகள்." உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!" எனக் கேட்டிருப்போம். தன் நலம் கருதாமல் பிறருக்கென்று வாழும்...." இருக்கும்போது பிறருக்காக இருக்கும் நாமும் மறைசாட்சிகளே!பிறருக்காக உயிரைக்கொடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் நாம் பிறருக்காக இருக்கிறோம் என்ற நினைப்பையேனும் அடுத்தவருக்குக் கொடுக்கலாமே! தந்தையின் அந்த " இறுதி" வரிகள் யாரை வேண்டுமானாலும் மறைசாட்சியாக்கக் கூடியவை.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete