Friday, August 18, 2017

ஊழியம் புரிவோம்

'ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.' (காண். யோசுவா 24:14-29)

யோசுவாவின் தலைமையில் யோர்தானைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழையும் இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் வார்த்தைகளைக் கேட்கும் நிகழ்வே நாளைய முதல் வாசகம்.

யாருக்கு ஊழியம் புரிவது? - இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு வரும் விடையே அவர்களின் வாழ்க்கையை மாற்றிப்போடும்.

பாரவோனிடமிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெறும் நிகழ்வில் முக்கியமாக உள்ளதும் இந்தக் கேள்வியே: 'பாரவோனுக்கு ஊழியம் புரிவதா. அல்லது கடவுளுக்கு ஊழியம் புரிவதா?'

கடவுளுக்கு ஊழியம் புரிதல் என்றால் கடவுள் பற்றிய சிந்தனைகளை மட்டும் கொண்டிருத்தல் ஆகும். தாங்கள் கைகளில் வைத்திருக்கும் மற்ற தெய்வங்களை ஆற்றில் எறிந்துவிட வலியுறுத்துகின்றார் யோசுவா.

நாம் யாருக்கு அல்லது எதற்கு ஊழியம் புரிகிறோமோ, அப்படியே அந்த ஆள் மற்றும் பொருளோடு இணைந்துவிடுகிறோம்.

ஊழியம் புரிதலுக்கு உள் மனக் கட்டின்மையும், உள் மன உறுதியும் அவசியம்.

3 comments:

  1. ஒரு தலைவன் என்பவனுடைய வெற்றி, தான் நல்வழியில் நடப்பது மட்டுமின்றி தன்னைச் சார்ந்த மக்களையும், அதே வழியில் இட்டுச்செல்வதில்தான் உள்ளது.இதை அழகாகச் செய்கிறார் யோசுவா. நமக்கு நன்மை செய்த இறைவனை மட்டுமே நாம் பற்றிக்கொள்ள வேண்டுமென்றும்,இலையெனில், மீண்டும் அவர் நம்மைத்தண்டிப்பது உறுதி என்றும் அன்பையும்,கண்டிப்பையும் ஒன்று சேர்ந்த கலவையாக்க் கொடுக்கிறார்.அவர்களின் அலைபாயும் மனத்தின் நிலைப்பாட்டை மாற்றி அவர்களை உண்மைக் கடவுளின்,பக்கம் நிற்கத்துணை புரிகிறார்.உண்மைதான்....வாழ்வில் முக்கியமான கட்டங்களில் நாம் 'இதுவா?','அதுவா?' என முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் இப்படிப்பட்ட வழிகாட்டிகள் நமக்கிருந்தால் அது ஒரு 'ஆசீர்வாதமே!' ஏனெனில் தந்தையின் கூற்றுப்படி " நாம் யாருக்கு அல்லது எதற்கு ஊழியம் புரிகிறோமோ,அப்படியே அந்த ஆள் மற்றும் பொருளோடு இணைந்து விடுகிறோம்." எது எப்படி இருப்பினும் " நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.".... தன் வார்த்தைகள் மக்களின் செவிகளில் தொடக்கத்தில் விழவில்லை என்றாலும் கூட தன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராமல் யோசுவாவுக்குக் கைகொடுத்தது அவரது 'உள்மனக்கட்டின்மை', மற்றும் 'உள்மன உறுதி' இவைகளை நம் வாழ்விலும் கடைப்பிடிப்போம். நம் வாழ்வின் " யோசுவா"க்களைத்தேடுவோம்; அவர்களுக்காக வேண்டுவோம்.இந்த வார இறுதி இனிதே அமைந்திட தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete