Thursday, August 3, 2017

கண்ணீர் கதை

இன்று காலை கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவர் வர காலம் தாழ்த்தியதால் அவரின் அறையில் ஒட்டப்பட்டிருந்த எல்லா போஸ்டர்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு போஸ்டர் என்னைக் கவர்ந்தது.

போஸ்டரின் தலைப்பு: 'உலர்ந்த கண்கள்'

கண்கள் ஏன் உலர்கின்றன? உலர்கண்களுக்கு மருத்துவம் என்ன? உலர் கண்கள் யாருக்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் வரும்? என நிறைய தகவல்களைக் கொண்டிருந்தது அது.

கண்கள் கண்ணீர் இல்லாததால் உலர்ந்து போகின்றன - இதுதான் சிம்பிளான பதில்.

தண்ணீர் இல்லாத தரை எப்படி உலர்கிறதோ, அப்படியே கண்ணீர் இல்லாத கண்ணும் உலர்ந்துவிடுகிறது.

கண்ணீர் எப்படி வருகிறது என்ற படமும் அங்கே வரையப்பட்டிருந்தது:

கண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்:

அ. சாதாரண கண்ணீர். இந்தக் கண்ணீர்தான் நம் கண்களுக்கு ஈரப்பதம் தருகின்றது.

ஆ. ரிஃப்ளக்ஸ் கண்ணீர். வெளியே நடக்கும் ஒரு நிகழ்வுக்கு நம் கண்கள் எதிர்வினை புரியும் கண்ணீர். புகை, வெங்காயம் உரித்தல், கண்களில் தூசி விழுதல் போன்ற நேரங்களில் வரும் கண்ணீர் இது. இந்தக் கண்ணீர் நம் கண்களின் கோர்னியாவின் மேற்புறத்தை தூய்மைப்படுத்துகிறது.

இ. அழுகின்ற கண்ணீர் அல்லது உளவியல் கண்ணீர். அதிக மகிழ்ச்சி, அதிக துக்கம், ஏமாற்றம், வருத்தம் போன்ற நேரங்களில், நம் உணர்வுகளின் உந்துதலால் சுரக்கும் கண்ணீர் இந்தக் கண்ணீர். இதை இயற்கையான வலிநிவாரணி (லெயுசின் என்கெஃபாலின்) என்கிறது மருத்துவம். நம் மூளையில் உள்ள லிம்பிக் பகுதிதான் நம் உணர்வுகளின் பிறப்பிடம். அந்த லிம்பிக் பகுதிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் உள்ள தொடர்பில் அசட்டில்கோலின் என்ற கண்ணீர் சிஸ்டம் கன்ட்ரோல் உண்டு. இந்த சின்ன ஸ்பார்க்தான் நீரைச் சுரக்க வைக்கிறது. ஆக, உணர்வு - நரம்பு - கண்ணீர் துகள் என மூன்று படிகளாக உருவாகிறது கண்ணீர்.

கண்ணீர் இடம் அல்லது நேரம் சார்ந்தது.

இறப்பு நடந்த இடத்தில் அல்லது மருத்துவமனையில் நாம் கண்ணீர் வடிக்கிறோம்.

அல்லது இழப்பு, துயரம் போன்ற நேரங்களில் கண்ணீர் வடிக்கிறோம்.

கண்ணீர்ல என்ன ஒரு சிறப்புன்னா என்னதான் நாம கண்ணீர் வடித்தாலும் நம் முகத்தைக் கழுவும் அளவிற்கு கண்ணீர் வடிக்க நம்மால் முடியாது. நாம் முகத்தில் அடிக்கும் தண்ணீர் காய்வதை விட, நம் கண்ணீர் வேகமாகக் காய்ந்துவிடுகிறது.

கண்ணீரில் முதலைக் கண்ணீர் என்ற வார்;த்தையை அறிமுகப்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.

குழந்தைகள் தங்கள் கண்ணீர் வழியாகவே மற்றவர்களுடன் பேசுகிறார்கள். அவர்களின் அழுகைதான் அவர்கள் பேசும் மொழி.

மேலும் ஒரு பெண் வருடத்திற்கு 50 முறை அழுகிறார் என்றால் ஒரு ஆண் 10 முறை மட்டுமே அழுகிறார் என்பது சர்வே முடிவு.

2 comments:

  1. Anonymous8/04/2017

    Yesu heart touching blog. பங்குத் தந்தையார்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  2. இன்று புனித ஜான் மரிய வியான்னியின் திருநாள் என்பதால் விசேஷமாக ஏதேனும் இருக்கலாம் என்று எதிர்பார்த்தால் ' கண்ணீர்க்கதையோடு' முடித்து விட்டார் தந்தை.ஒரு வேளை அது அவரின் ஆனந்தக்கண்ணீரின் வெளிப்பாடாக்க்கூட இருக்கலாம்.ஆம்! 'தண்ணீர் இல்லாத தரை எப்படி உலர்கிறதோ அப்படியே கண்ணீர் இல்லாத கண்ணும் உலர்ந்து விடுகிறது' அக்மார்க் உண்மை.ஆனால் இந்த முதல் இரு கண்ணீரைவிட அந்த மூன்றாவது கண்ணீர் ' உளவியல் கண்ணீர்' சற்று வித்தியாசமானது; விசேஷமானதும் கூட. மனத்தில் ஈரம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த 'உளவியல் கண்ணீரால்' கண்களை ஈரமாக்க முடியும்.அழுகின்றவர்களைப் பார்த்து கேலி செய்பவர்களைக் கண்டிருப்போம்.எல்லா உணர்ச்சிகள் போன்று ' அழுகையும்' ஒரு உணர்வு என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.மனிதனை மாக்களிலிருந்து பிரிப்பது இந்தக் கண்ணீரே. எதிரிலிருப்பவரைப்பார்த்து 'உன் துன்பம் என்துன்பம்; உன் இழப்பு என் இழப்பு' என்று நினைக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே கண்கள் ஈரமாகும்.ஆகவே அடுத்தவரின் கண்ணீரின் அர்த்தம் புரிந்து செயல்படுவோம்.கண்ணீர் பற்றித்தந்த நல்லதொரு டாக்குமென்டரிக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

    இன்று புனித மரிய வியான்னியின் திருநாள் காணும் என் இனிய தந்தைக்கும்,அனைத்து மறைமாவட்ட குருக்களுக்கும் என் இனிய திருநாள் வாழ்த்துக்களையும்,செபங்களையும் உரித்தாக்குகிறேன்! இறைவன் தங்கள் அனைவரையும் தன் கண்களின் இமையெனக் காப்பாராக! அன்புடன்......

    ReplyDelete