Wednesday, August 9, 2017

பார்க்கும் விதம்

பொருள்கள் இப்படி இருக்கின்றன என்பதால் நாம் அவற்றை அப்படிப் பார்ப்பதில்லை.
நாம் இப்படி இருக்கின்றோம் என்பதால்தான் நாம் அவற்றை அப்படிப் பார்க்கிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எண் 13, 14) நாம் இதற்கான எடுத்துக்காட்டைப் பார்க்கிறோம்.

மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டை நெருங்கிவிட்டனர். நாட்டிற்குள் நுழையுமுன் அதற்கு முன்னேற்பாடாக உளவு பார்க்க மக்களை அனுப்பி வைக்கின்றார்.

'ஆழம் பார்த்துக் காலை விட வேண்டும்' என்பதில் மோசே தெளிவாக இருக்கின்றார்.

ஒரே குழுவாகச் சென்றாலும், இரண்டு குழுக்களாக திரும்பி வருகின்றனர்.

ஒரு குழுவினர் ரொம்ப தைரியமாக வருகின்றனர்.

மற்ற குழுவினர் பயந்து போய் வருகின்றனர்.

இரண்டாம் குழுவினரின் பயம் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களின் வளர்ச்சியையும் தடை செய்யும் என்பதால் மோசே அவர்களை அப்பறப்படுத்திவிடுகின்றார். மேலும் இரண்டாம் குழுவினர் போராடுவதற்குத் தயங்குபவர்களாகும் இருக்கின்றனர்.

இரண்டாம் குழுவினரின் பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் தங்கள் கடவுளின்மேல் நம்பிக்கை கொள்ளாமல், தங்களின் சொந்த ஆற்றல்மேல் மட்டுமே நம்பிக்கை கொண்டதே.

இன்று நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதம் எப்படி இருக்கிறது?


1 comment:

  1. " இறை நம்பிக்கையை" எடுத்துச்சொல்லும் ஒரு பதிவு. பல சமயங்களில் நாம் ஒரு பொது வேலையில் ஈடுபடும் போது நம் உடனிருப்பவர்களைப்பற்றித் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.தங்களைக் குறித்த மேன்மையான எண்ணம் இல்லாதவர்கள் தங்கள் உடனிருப்போரையும் அதலபாதாளத்திற்குத் தள்ளி விடுவர். நாம் இறைவனின் திருவுளத்தோடு,நம் சொந்த பலத்தையும் மூலதனமாக வைத்து ஒரு செயலில் ஈடுபடும் போது ' வெற்றி' நமதே' என்ற நேர்மறை எண்ணம் நமக்கு வேண்டும்.' பாலும், தேனும்' மொழியும் கானான் தேசத்தைக் கைக்கெட்டிய தூரத்தில் கண்டும், அதற்கும் மேல் மோசேயின் வழிகாட்டலும் இருந்தும் தாங்கள் நினைத்ததை அடைய முடியாதவராகின்றனர் மோசே அனுப்பிய மக்களில் ஒரு சிலர். "ஆழமறிந்து காலைவிடு" எனும் தந்தையின் கூற்றோடு இறை நம்பிக்கையும்,சுயநம்பிக்கையும் கலந்த ஒரு மனநிலை இருப்பவனுக்கு " ஒரு புல்லும் கூட ஆயுதமே!" என்பதை தன் வார்த்தைகளால் உணர்த்த முயற்சிக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete