Tuesday, August 22, 2017

மரங்களும், மக்களும்

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15) கிதியோனின் கடைசி மகன் யோத்தாம் ஒரு கதை சொல்கிறார்.

தங்களை அரசாளும்படி ஆள்களைத் தேடுகின்ற மரங்கள் ஒலிவம், அத்தி, திராட்சை எனத் தேடி கடைசியில் முட்புதரின் கைகளில் விழுகின்றன.

அபிமெலக்கு அரசனான நிலை அப்படித்தான் இருந்தது என உருவகிக்கிறது கதை.

நம்முடைய இன்றைய இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலையும் இதற்கு விதிவிலக்கல்ல.

மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்கள் போல இருக்கிறார்கள் - என்று பார்வையற்ற அந்த மனிதன் சொன்னது முற்றிலும் சரியே.

2 comments:

  1. மரங்களுக்கு இருக்கும் மதி கூட மாந்தருக்கு இல்லை. அத்தி மரத்தையும், ஒலிவ மரத்தையும்,மற்றும் திராட்சைக்கொடிகளையும் தங்களை ஆளும்படிச் சொல்லிக்கேட்டும்,அந்த மரங்களுக்கு தங்கள் போக்கிடமாகக் கிடைத்ததென்னவோ ' முட்புதரே' தந்தை இதை இன்றைய நம் நாட்டு நிலமையோடு ஒப்பிடுவது ஒரு பக்கம் பரிதாபத்தையும்,மறுபக்கம் சிரிப்பையும் வரவழைக்கிறது.அந்தப் பார்வையற்ற மனிதன் சொன்னது போல் நம் மக்கள் மரங்களைப்போல் தெரிந்தால் கூடப் பரவாயில்லை...ஆனால் அவர்கள் 'மாக்களாக' அல்லவோ தெரிகிறார்கள்! இன்றைய தமிழக,மற்றும் இந்திய அரசியலுக்கு சாட்டையடி கொடுக்கும் ஒரு பதிவு! தந்தைக்கு என் காலை வணக்கங்கள்!!!

    ReplyDelete
  2. மிக சரியான ஒப்புமை...
    வாழ்த்துக்கள் fr..

    ReplyDelete