Sunday, August 6, 2017

எண்ண வேண்டாம்

எங்கள் இல்லத்தில் வாழும் ஒரு தந்தைக்கு பணம் அன்பளிப்பு கொடுத்த ஒருவர் அவரிடம் கொடுக்கச் சொல்லி என்னிடம் தந்தார்.

காலை உணவு முடித்துவிட்டு அந்த தந்தைக்காக காத்திருந்தேன்.

கவரைக் கொடுத்தேன்.

கொடுத்தது யார் என்று சொன்னேன்.

'நன்றி' என்றார்.

'சிரித்தார்.'

கவரைத் திறந்தார். பார்த்தார்.

ஆனால் எண்ணிப் பார்க்கவில்லை.

'எண்ணிப்பாருங்க!' என்றேன்.

'எதுக்கு எண்ணனும்? கிப்டா வந்ததுதான!' என்றார்.

'நமக்கு வர்ற கிப்ட எண்ணக்கூடாது. இது என்ன நான் வாங்கும் சம்பளமா? நான் எதுக்கு எண்ணனும்? கிப்டா வர்ற பணத்தை எண்ணினா, 'இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமோ?' என்ற எண்ணம் வரும்.

கிப்ட் கொடுத்தவருக்கு நன்றி.

கிப்டை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த ஃபிலாசஃபி எனக்கு பிடித்திருந்தது.

என் வாழ்வின் கிப்டுகளை நான் எண்ணிப்பார்த்து ஏங்குவதை விட, அப்படியே எடுத்துக்கொண்டு பகிரத் தொடங்கினால் வாழ்க்கை இனிமையே!

1 comment:

  1. தங்களிடமிருந்து பணக்கவரைப் பெற்ற அந்த தந்தைப் பணத்தை எண்ணாமல் போனது தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினால் கூட இருக்கலாம். இருப்பினும் தங்களுடைய " என் வாழ்வின் கிப்டுகளை நான் எண்ணிப்பார்த்து ஏங்குஙதை விட,அப்படியே எடுத்துக்கொண்டு பகிர்த்தொடங்கினால் வாழ்க்கை இனிமையே!" எனும் ஃ பிலாசஃபியும் நன்றாகவே உள்ளது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete