
'நான் மோசேயுடன் இருந்ததுபோலவே உன்னுடனும் இருப்பேன்' என மொழிகின்ற கடவுள், தன் பிரசன்னத்தை அப்படியே உறுதி செய்கின்றார். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்ததுபோல யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதியைக் கடக்கின்றனர்.
ஆனால், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
அங்கே மோசே தானே தன் கைகளால் செங்கடலைப் பிரித்தார்.
இங்கே யோசுவாவிற்கு குருக்களின் துணை தேவைப்படுகிறது.
(குருக்களின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலத்தில் ஒருவேளை இந்த இறைவாக்குப் பகுதி எழுதப்பட்டிருக்கலாம்)
ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் ஏறக்குறைய 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பேழையின் ஊடாகக் கடந்து போகும் வரை குருக்கள் உடன்படிக்கை பேழையை ஏந்தியவர்களாக தண்ணீருக்குள் நிற்கின்றனர்.
தனக்கு கால் நனைந்தாலும் பிறரின் கால் நனையாமல் அக்கரைக்கு அவர்களைக் கடத்துவதே அருள்பணியாளரின் பணி.
Good morning Yesu. Have a nice day.
ReplyDelete" தனக்குக் கால் நனைந்தாலும் பிறரின் கால் நனையாமல் அக்கரைக்கு அவர்களைக்கடத்துவதே அருள்பணியாளரின் பணி" அருட்பணியாளர்களின் மகத்துவத்துவம் கூற இதற்குமேல் வார்த்தைகள் இல்லை என்றே எண்ணுகிறேன். நம் வாழ்வில் நம்மைக் கரைசேர்க்க வரும் மோசேக்களையும்,யோசுவாக்களையும் இனம் கண்டு கொள்வோம்; அவர்களை நம் குடும்பங்களில் ஒருவராக அங்கீகரிப்போம்; அவர்களுக்காக தினம் இறை வேண்டல் செய்வோம். தந்தைக்கு என் காலை வணக்கங்களும்! வாழ்த்துக்களும்!!!
ReplyDelete