நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33) நாம் காணும் உரையாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்:
'ஐயோ, பேய்!'
'துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்!'
'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் வரக் கட்டளையிடும்!'
'வா!'
'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!'
'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'
'உண்மையாகவே நீர் இறைமகன்!'
நிகழ்வின் தொடக்கத்தில் பேயாகத் தெரிந்தவர் இறுதியில் இறைமகனாகத் தெரிகிறார்.
நம்ம வாழ்க்கையிலும் இதே போன்ற அனுபவம் இருந்திருக்கலாம்.
நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை, கஷ்டம், நோய், வறுமை, இயலாமை போன்ற பொழுதுகளில், முதலில் 'பேய்' போல தெரிவது, சட்டென்று மாறுது வானிலை என்பதுபோல, 'இறைமகனாக' தெரிய ஆரம்பிக்கிறது.
இந்த மாற்றத்திற்கு இடையில் நம் மனம், 'பயம்,' 'தயக்கம்,' 'ஏக்கம்,' 'அவநம்பிக்கை' என பயணம் செய்கிறது.
இயேசு தன் சீடர்கள் வாழ்வின் எதார்த்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களை இந்த எல்லா உணர்வுகள் வழியாகவும் அழைத்துச் செல்கிறார். இயேசு நினைத்திருந்தால் தான் அமர்ந்திருக்கும் மலையிலேயே இருந்துகொண்டு ஒரே வார்த்தையில் கடலின் கொந்தளிப்பை அடக்கியிருக்கலாம்.
ஆக, நாமாகவே நம் வாழ்வின் நிலைகளைக் கடந்து செல்வதே அற்புதம்.

இறைமகன் இயேசு இப்பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னை " இறைமகனாக"க் காட்டிக்கொண்ட நேரங்களை விட நம்மில் ஒரு சகமனிதனாக வாழ்ந்த நேரங்கள் தான் அதிகம்.தன் சீடரிடம் தன்னைச்சுற்றி நின்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டி நின்ற நேரமாகட்டும்; தன் உயிர் நண்பன் இலாசரைக் கல்லறையினின்று உயிரோடு வெளிக்கொணர்ந்த நேரமாகட்டும்....அவர் தம்மைச்சுற்றி நின்ற மக்களுள் ஒருவராகத்தான் முதலில் தன்னைக்காட்டிக்கொள்கிறார்.அவர்களது துன்பத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார். தந்தை கூறுவது போல " தாமாகவே நம் வாழ்வின் நிலைகளைத் கடந்து செல்லும் அற்புதத்தை" நாம் அனுபவிக்க வேண்டுமென நினைக்கின்றார்.நம் வாழ்விலும் இயலாமை,வறுமை,கஷ்டம்,நோய் போன்ற பேய்கள் தலைவிரித்தாடும்போது...பயம்,தயக்கம்,ஏக்கம்,அவநம்பிக்கை எனும் தடைக்கற்கள் வாழ்க்கையில் நம்மை இடறச்செய்யும்போது" ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்" என்று அபயக்குரல் எழுப்பினால் " இதோ நானிருக்கிறேன்; என் கையைக்கெட்டியாகப் பிடித்துக்கொள்" என்று நம்மைத் தன் தோளில் சுமக்க வருவார்.இந்த நம்பிக்கை ஒன்றே போதும்..நம் வாழ்வில் எத்தனை பெரிய கரு மேகங்களையும்,மழையையும்,புயலையும் சமாளிக்க எனும் தந்தையின் வார்த்தைகளுக்காக நன்றியும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!
ReplyDelete