Monday, August 21, 2017

அரசியான மரியாள்

நாளை அன்னை மரியாளை அரசி அல்லது அமைதியின் அரசி எனக் கொண்டாடுகிறோம்.

'அமைதியின் அரசி' சுரூபம் உரோமையின் மேரி மேஜர் பேராலாயத்தில் ஒய்யாரமாக உள்ளது. ஒரு கையில் குழந்தை இயேசுவை ஏந்தி கம்பீரமாக அமர்ந்து கொண்டு மறு கையினால், 'நிறுத்து' என்று சொல்வது போல இருப்பார்.

அமைதி என்பது ஒரு கொடை.

பல நேரங்களில் நாம் அதை வெளியே தேடுகிறோம். ஆனால் அது நம்மில் இயல்பாகவே இருக்கிறது. நாம்தான் அதன்மேல் கல் எறிந்து குலைத்துக்கொள்கிறோம்.

எபிரேயத்தில் அமைதி என்ற வார்த்தையை 'ஷலோம்' என அழைக்கின்றனர்.

'ஷலோம்' என்றால் முழுமை.

அதாவது, ஓட்டை இல்லாத நிலை.

ஒரு மண்பானை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதனுள் தண்ணீர் ஊற்றி வைக்கிறோம். வைக்கின்ற தண்ணீர் அப்படியே இருந்தால்தான் அது நல்ல பானை. தண்ணீர் வெளியேறினால் அது கீறிய அல்லது உடைந்த பானை என்கிறோம்.

சின்னஞ்சிறு கீறலும் கூட பானையின் தண்ணீரை கலங்கடித்து வெளியேற்றிவிடுகின்றது.

மரியாள் தொடக்கமுதல் இறுதிவரை தன் பானையை கீறல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரின் எல்லா செயல்பாடுகளும் எந்தவொரு முன்பின் முரண் இன்றி ஒருங்கியக்கம் பெற்றிருந்தன.

மரியாள் நம் அமைதியைக் காத்துக்கொள்ள நல்ல முன்மாதிரி.

2 comments:

  1. இன்றைய பதிவு எனக்கு ஏதோ 'need of the hour' போல் இருந்தது.' அமைதியின் அரசி' அன்னை மரியாளுக்கு இன்னுமொரு ''சிறப்பு " சேர்க்கும் பெயர்.தந்தையின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.' உள்ளே' இருக்கும் அமைதியைப் பல நேரங்களில்,பல காரணங்களுக்காகத் தொலைத்து விட்டு அதை வெளியே தேடுவது என் போன்றவர்களுக்கு வாடிக்கையான செயல்.தன்னிடம் கொடுக்கப்பட்ட 'பானையை' எந்த விதக்கீறலுமின்றி இறுதிவரை பாதுகாத்த மரியாள் என் மன அமைதிக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.எனக்குத் தேவையான ஒரு 'மன அமைதியை' மரியாள் வழியாகத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மரியாவின் அமைதி அவளின் அரசாட்சியின் முக்கிய காரணி...
    இனிய விழா வாழ்த்துக்கள்...

    ReplyDelete