'அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது' (காண். ரூத்து 1).
நாளைய முதல் வாசகத்தோடு நாம் ரூத்து நூலைத் தொடங்குகிறோம்.
இரண்டு பெண்கள்.
இருவரும் கைம்பெண்கள்.
தங்கள் வாழ்வில் வெறுமை, இழப்பு, வறட்சி, பசி என அனுபவித்தவர்கள் ஆண்டவரின் அற்புதச் செயல்கள் பெத்லகேமில் செய்யப்படுவதைக் கேட்டு அந்த நகர் நோக்கிப் புறப்படுகின்றனர்.
தன் கடவுள் வேற்றுக்கடவுள் என்றாலும் நகோமி கடவுளைத் தன் கடவுளாகத் தேர்ந்து கொள்கிறாள் ரூத்து.
விளைவு.
அவர்கள் பெத்லகேமை நெருங்கியபோது கோதுமை அறுவடை தொடங்கியிருக்கிறது.
இந்த நிகழ்வு கற்பிக்கும் பாடம் என்ன?
நகர வேண்டும்
வெறுமை, இழப்பு, வறட்சி ஆகியவை நம்மை ஓரிடத்தில் அல்லது ஓர் நேரத்தில் கட்டிவிடா வண்ணம் நாம் நகல வேண்டும்.
நகரும்போது நம்மை அறியாமலேயே அறுவடை தொடங்கியிருக்கும் இடத்தையும் நேரத்தையும் வந்தடைவோம்.

மாமியாருக்கும்,மருமகளுக்குமிடையே இழையோடும் பரிவையும்,பாசத்தையும்,பந்தத்தையும் பாங்குற எடுத்துரைக்கும் பதிவு. பாசமா?... 'அப்படின்னா?' என்ற சொற்கள் நம் செவிகளை வந்தடையும் இந்நாட்களில் ஒரு மருமகள் மாமியாரைப்பார்த்து " உன் கடவுளே என் கடவுள்; உன் இனமே என் இனம்" என்று சொல்ல ஒரு பெரிய மனது வேண்டும். ஒரு அனுபவசாலியின் முதிர்ச்சியோடு வரும் தந்தையின் வார்த்தைகள்..." வெறுமை,வறட்சி,இழப்பு ஆகியவை நம்மை ஓரிடத்தில் அல்லது ஓர் நேரத்தில் கட்டிவிடா வண்ணம் நாம் அகல வேண்டும்" ஆம்; நம் உறவுப்பாலம் முறிந்துவிடாதிருக்கவும்,ஆயிரம் இடர் வந்திடினும் அது தன் இணைப்பைப் துண்டித்து விடாதிருக்கவும் இதுவே வழி என்பதை உணர்ந்து சொல்லும் வார்த்தைகள். முதல் ஏற்பாடு போன்ற விளைநிலத்திற்குள் ஒளிந்திருக்கும் "ரூத்து ஆகமம் " போன்ற பொற்குடங்களை அவ்வப்போது தோண்டி எடுத்துத்தரும் தந்தைக்கு என் நன்றிகள்! வணக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!
ReplyDelete"நகரும் போது நம்மை அறியாமலேயே அறுவடை தொடங்கியிருக்கும் இடத்தையும் நேரத்தையும் வந்தடைவோம்"
ReplyDeleteஅருமை...