Saturday, August 26, 2017

தற்செயலாக

நேற்று நாம் வாசிக்கத் தொடங்கிய ரூத்து நூல் இன்று முடிகிறது.

பெத்லகேம் வந்த நகோமி ரூத்தை தன் உறவினர் போவாசின் தோட்டத்திற்கு அனுப்புகின்றார். போவாசின் பார்வையில் தயை பெறுகின்றார் ரூத்து. பின் அவர் போவாசைத் திருமணம் செய்துகொள்கின்றார்.போவாசு வழியாக ஒபேது என்ற மகனைப் பெற்றெடுக்கின்றார். அவரே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.

இதில் என்ன அழகு என்றால் எல்லாம் தற்செயலாக நடக்கின்றது.

'தற்செயலாக, ரூத்து போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது.'

இந்த தற்செயல் நிகழ்வே மீட்பு வரலாற்றை மாற்றிப்போடுகின்றது.

வாழ்க்கையில் எல்லா நேரங்களும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கத் தேவையில்லை. 'இதைச் செய்தால் இது நடக்கும். இப்படிச் செய்தால் இப்படி நடக்கும்' என்பது அறிவியலுக்கு ஒத்துவருமே தவிர வாழ்விற்கு ஒத்துவராது.'

அதாவது, தற்செயலாக நடப்பவற்றிற்கு நம்மையே விட்டுவிடுவது.

தற்செயலாக ரூத்து அங்கே செல்லாவிட்டால் போவாசைக் கண்டிருக்க முடியாது. அவரின் பார்வையில் கனிவு கிடைத்திருக்காது. திருமணம் நடந்திருக்காது. குழந்தை பிறந்திருக்காது. நகோமியின் வருத்தம் நீங்கியிருக்காது.

தற்செயலும் நற்செயலே.

2 comments:

  1. Wow! " தற்செயலும் நற்செயலே!" அழகானதொரு வெளிப்பாடு.நாம் நாட்களாக,மாதங்களாக ஏன் வருடங்களாக்க்கூடத் திட்டமிட்ட பல செயல்கள் நமக்குக் கை கூடாமலிருக்க,நாம் கனவிலும் நினையாத பல விஷயங்கள் நமக்கு நன்மை சேர்ப்பது நாம் கண்கூடாகக் கண்டிருக்கக் கூடிய விஷயமே! இதைத்தான் 'இறை செயல்' எனவும் எடுத்துக்கொள்கிறோம். "வாழ்க்கையின் எல்லா நேரங்களும்திட்டமிட்டுக்கொண்டே இருக்கத்தேவையில்லை. 'இதைச்செய்தால் இது நடக்கும்; இப்படிச்செய்தால் இப்படி நடக்கும்' அறிவியலுக்கு ஒத்து வருமே தவிர வாழ்விற்கு ஒத்து வராது" தந்தையின் வார்த்தைகள் சத்தியமான உண்மையை ஒலிக்கின்றன.தற்செயலாக நடப்பவற்றிற்கு நம்மையே விட்டுவிடுவது.....அது இறை சித்தமாகவும் கூட இருக்கலாம். சொல்வதற்கு எளிதாக இருக்கும் இந்த வார்த்தைகள் செயல்படுத்தப்படுகையில் எளிதாக இருப்பதில்லை.முயன்றுதான் பார்ப்போமே! அழகான பதிவு! ஆறுதல் தரும் வார்த்தைகள்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. நேற்று தொடங்கி இன்று முடிந்த ரூத் புத்தகம் குறித்த தற்செயல் எதார்த்த கருத்துக்கு நன்றி...

    ReplyDelete