நார்வே நாட்டின் பேர்கன் நகருக்கு உயிர்ப்பு பெருவிழா பணிக்காக வந்து இன்றோடு ஒன்பது நாட்கள் நகர்ந்துவிட்டன.
பேர்கன் என்றால் நினைவிற்கு வருவது - மலை மற்றும் மழை! சுற்றிலும் ஏழு மலைகள். எந்நேரமும் பெய்து கொண்டிருக்கும் மழை.
மிகக்குறைவான மக்கள்தொகை. மிகப்பெரும் வளம்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நாடுகளில் ஒன்று நார்வே.
'ஃப்ளாய்பானென்' எனப்படும் கண்ணாடிக் கார் மலைப்பயணம், உல்ரிக்கன் என்னும் மலைக்குச் சென்ற கயிற்கார் பயணம் மற்றும் காரில் சுற்றிய இரவுநகர்ப் பேர்கன் என்னும் மூன்று பயணங்கள் என்றும் நினைவுகூறத்தக்கவை.
இங்கு வரவேற்று உபசரித்த அருட்தந்தை. ரெஜி நல்ல நண்பர்.
'பயணிகளாக வாருங்கள். திருப்பயணிகளாகத் திரும்பிச் செல்லுங்கள்!' என்று பாலஸ்தீனத்தின் நுழைவாயிலில் எழுதியிருப்பார்கள்.
'அந்நியர்களாக வாருங்கள். நண்பர்களாகத் திரும்பிச் செல்லுங்கள்!' என்பதுதான் பேர்கன்நகர் தமிழ்ச் சமூகம் சொல்லாமல் சொன்ன ஒரு செய்தி.
'நீங்க என்ன செய்றீங்க?' என்று மூன்று வயது இளவல் ஒருநாள் மாலை கேட்டதுதான் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. சின்னக் கேள்விதான். ஆனால், இதற்குப் பதில் சொல்ல நிறைய சிந்தனையோட்டம் தேவை.
பேர்கனில் அனுபவித்த தமிழைப் பிரிவது வருத்தமாக இருந்தாலும்,
ரோமையில் காத்திருக்கும் நம் குட்டிப்பொண்ணு 'தமிழை' நினைக்கும்போது ஆறுதலாக இருக்கிறது.
இனிய உயிர்ப்பு பெருவிழா இந்த மண்ணில்.
பேர்கனுக்கு நன்றி! வணக்கம்!!

தந்தையே! தாங்கள் நார்வே நாட்டின் பேர்கன் நகருக்கு ' உயிர்ப்புப் பெருவிழா' பணிக்காகவே போயிருப்பினும் அங்கு எத்துணை மகிழ்ச்சியுடன் தங்கள் அப்பணியை செய்திருக்கிறீர்கள் என்பதைத் தங்களின் அழகான பின்னனியுடன் கூடிய புகைப்படமும்,தங்களின் நன்றிமிகு வார்த்தைகளும் வெளிப்படுத்துகின்றன." அந்நியர்களாக வாருங்கள்; நண்பர்களாகத் திரும்பிச் செல்லுங்கள்"..... பேர்கன் நகர் தமிழ் சமூகத்துக்குப் பாராட்டு.ஆமாம்...அந்த இளவல் கேட்ட கேள்விக்கு என்னதான், பதில் கூறினீர்கள்? சஸ்பென்சாக விட்டு விட்டீர்களே! எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாக மண்டை வறண்டுபோயிருக்கும் தங்களைப் போன்றவர்களுக்கு இப்படி ஒரு 'ப்ரேக்' தேவைதான். அருட்பணியாளர் ரெஜிக்கு நன்றிகள்!!! பேர்கனில் பிரியும் 'தமிழ்' ரோமையில் தொடரட்டும்..........
ReplyDeleteதந்தையே உங்கள் புகைப்படமும் அழகாக உள்ளது, தமிழ் வரிகளும்அழகாக உள்ளது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
ReplyDelete