நம்ம குழந்தைங்க ஸ்கூல் கிளம்பும்போது அவங்களுக்கு சாக்ஸ் மாட்டிவிடுற நேரத்துல
பேலன்ஸ் பண்றதுக்காக அவங்களோடு பிஞ்சுக் கைகள நம்ம தலையில வைக்கிறது
ஏதோ அவங்க நம்மள ப்ளஸ் பண்ற மாதிரியே இருக்கும்...
அப்படின்னு கடந்த வாரம் ஆனந்தவிகடனில் வாசித்தேன்.
இன்னைக்கு நம்ம தமிழுக்கு புது சாக்ஸ் மாட்டிவிடும்போது எனக்கும் அது என்னை ப்ளஸ் பண்ற மாதிரிதான் இருந்துச்சு.
தமிழ்.
வந்து 21 நாள் ஆகுது இன்றோடு.
எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்ற என் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதுபோல இருக்கிறது.
'இன்னர் சைல்ட் ஹீலிங்!' என்ற உளவியில் ஆய்வில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள குழந்தையைப் பற்றியும், அந்தக் குழந்தையை நாம் கையாளும் விதம் பற்றியும் சொல்வார்கள். நான் முதலில் எனக்கே ஒரு குழந்தையாக இருக்கும்போதுதூன், அல்லது என் வெளியில் நின்று கொண்டு என்னை ஒரு குழந்தையாக பார்க்கும்போது என் பார்வை வித்தியாசமாகிறது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் போன்ற கேள்விகளுக்குக் கூட விடை கிடைக்கிறது.
இந்த இன்னர் சைல்ட் பொம்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அது வேறு ஒரு பொருளாக இருக்கலாம். ஏன் இயேசுவுக்கு சிலுவை கூட தன் இன்னர் சைல்டின் ஒரு வெளிப்பாடாகத்தான் இருந்தது. அதனால் தான் மற்றவர்கள் வெறுத்துத் தள்ளிய சிலுவையை ஒரு குழந்தையை அரவணைப்பது போல அரவணைத்துக் கொள்கின்றார்.
தமிழ்...
என் தனிமை போக்குகிறாள்.
நான் பேசுவதை எல்லாம் கேட்கிறாள்.
ஆனால் அவள் எதுவும் பேசுவதில்லை என்றாலும் அவளின் குரல் எனக்குக் கேட்கிறது.
தமிழ் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக நான் அறையில் உடைமாற்றுவதுகூட கிடையாது.
அவளின் குட்டிக்கால்களுக்கு சாக்ஸ் அணிவித்தது...
என் பிறவாத குழந்தையைக் கையில் ஏந்தியது போலத்தான் இருந்தது...
மனிதமனம்....அது வித்தியாசமானது; விநோதமானது. நம்முடைய நியாயமான, நிறைவேறாத ஆசைகளை அவரவர் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்வதில் தப்பில்லை என்றே எண்ணுகிறேன்.ஒரு குழந்தையின் பிஞ்சுக்கைகள் நம் தலை மீது படும்போது அதை ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்வது அழகான விஷயம். அது தங்களின் குழந்தை மனத்தை எதிரொலிக்கிறது.உங்கள் 'தமிழ்' அழகாய் இருக்கிறாள்.அவளை எனக்கும் கூடப் பிடித்திருக்கிறது.இன்றைய நாள் இனிமையாகட்டும்!!!
ReplyDeleteஎனக்கும் அவளை ரொம்ப பிடித்திருக்கிறது.
ReplyDeleteI too like your Tamil.
ReplyDeleteReally now I like so much your tamil
ReplyDelete