Tuesday, April 14, 2015

தமிழ்ப் புத்தாண்டா?

ஏப்பிரல் 14, அதாவது சித்திரை 1 அன்று தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறதா அல்லது தை 1 அன்று புத்தாண்டு தொடங்குகிறதா என்பதில் குழப்பம் இருக்கிறது.

மக்களின் முதல்வர் வாழ்த்து சொன்ன மாதிரி இன்று நம் தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை.

தமிழன் ரொம்பவே பாவம். அவன் கொண்டாடும் விழாவில் கூட அரசியல்.

சித்திரை 1 ஒரு ஆரியத் திணப்பு என்கிறார்கள் திராவிடர்கள். ஆனால், ஒரு காலத்தில் திராவிடர்கள் என்று சேர்ந்து நின்ற நாமே இன்று ஒருவர் மற்றவரை அடித்துக் கொண்டிருக்கிறோம். குடிக்க தண்ணீர் இல்லை. செய்வதற்கு வேலை இல்லை. வெளியிலிருந்து வந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். நாம் வெளியே போனாலும் நமக்கு அடி. உள்ளே இருந்தாலும் நமக்கு அடி. இதையெல்லாம் கண்டுகொள்ளாத நம்ம கோட் ஸ்பெஷலிஸ்ட் மோடி ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் போயிருக்கிறார். 'எங்க ஊருக்கு வாங்க! எங்க ஊருக்கு வாங்க! மேக் இன் இந்தியா!' அப்படின்னு யாருமே இல்லாத ஊருல ரொம்ப சீரியசா டீ ஆத்திகிட்டு இருக்கிறார்.

ஜெயா ஜெயிலிக்குப் போவாரா மாட்டாரா என்று அதிமுக ஆர்வமாக இருக்கிறது.

'சாராயம் விற்றால் தான் கடனை அடைக்க முடியும்!' என்று நிறையக் குடிக்கச் சொல்கிறார் நம்ம பன்னீர்.

பெண்களின் கழுத்தில் இருக்கும் தாலிக்கயிற்றை அவிழ்க்கும் போராட்டம் நடத்துகிறது தி.க.

2ஜி வழக்கு இருப்பதால் அடக்கி வாசிக்கிறது திமுக.

இராஜபக்சே அரசு கவிழ்ந்தவுடன், இனி அட்டாக் செய்ய ஆளில்லை என்று பச்சை சட்டை போட்டுக் கொண்டு பழனி புறப்பட்டுவிட்டார் சீமான்.

வழக்கம்போல சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே, தன் மகனின் 'சகாப்தம்' படம் பார்ப்பதிலியே தன் பொழுதைக் கழிக்கின்றார் விஜயகாந்த்.

தமிழ்நாடு என்னும் கப்பலில் நிறைய ஓட்டைகள் விழுந்து, மூழ்கும் அபாயம் வந்து கொண்டே இருக்கிறது.

இருந்தாலும், இந்தக் கப்பல் பத்திரமாய்க் கரைசேரும் என்று ஒரு பக்கம் நம்பிக்கை.

மற்றொரு பக்கம், மூழ்குகிற கப்பலில் அரிசி திருடுவதுபோன்ற எலிக்கூட்டம்.

நிற்கவும் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. வெளியே குதிக்கவும் முடியவில்லை.

இருந்தாலும்,

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


1 comment:

  1. தமிழ்நாட்டிலேயே குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எங்களை விட இந்திய, தமிழக விஷயங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமின்றி எம்முடனும் பகிர்ந்து கொள்கிறீர்கள்.தங்களின் நாட்டுப்பற்று எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.இதுவும்் 'தூரம்'செய்யும் மாயமோ? என்ன சொல்லி என்ன பயன்? பூனைக்கு மணிகட்ட ஆளில்லாமல் தொய்ந்து நிற்கிறது நம்மூர் அரசியல். பல சமயங்களில் கண்மூடித்தனமாக மௌனியாக இருப்பதே சுகம் என நினைக்கத்தோன்றுகிறது.ஆண்டவன் காக்கட்டும் இந்த மூழ்கும் கப்பலை. நல்ல மாலுமிகளுக்காக வரம் கேட்போம். அப்புறம் எந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவது எனக்கவலைப்படுவோம்......

    ReplyDelete