Monday, April 6, 2015

ஐ ஆம் ரிசன்!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.

பேதுருவின் சாம்சங் கேலக்ஸி ஃபோர் எஸ் ஃபோனில் ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் மெசஜ் வந்து ஸ்க்ரீன் மின்னியது. ஒரு சாய்ந்து படுத்தவராய் அதை எட்டி எடுத்தார்.

மூன்று நாட்களாக ஃபோன் சைலண்ட் மோடில் தான் இருக்கின்றது.

'ஜீசஸ் ஃஹேஸ் சேன்ஜ்ட் ஹிஸ் ப்ரஃபைல் பிக்சர்'

வெள்ளைநிற ஆடையில் இயேசு.

கடைசியாக அவரின் ப்ரஃபைலில் சிகப்பு நிற ஆடையில் முள்முடி அணிந்தவராய் பிலாத்துவின் அரண்மனையில் எடுத்த ஃபோட்டோ தான் இருந்தது.

வேகமாக வாட்ஸ்ஆப் திறந்து ஜானின் பெயரைத் தேடினார். வழியில் 'ஜே' யில் ஜீசஸ் பெயர் பட்டது.

'ஐ ஆம் ரிசன்!' - இயேசுவின் வாட்ஸ்ஆப் சேட்டும் மாறியிருந்தது.

ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது மகதலா மரியம்மாளிடமிருந்து ஒரு மெசஜ்:

'ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'

பதைபதைப்புடன் ஜானுக்கு பேதுரு டெக்ஸ்ட் செய்கிறார்:

'ஸ்டார்ட் இம்மிடியட்லி. வீ மஸ்ட் கோ டு சீ த க்ரேவ். சம்திங் ஸ்ட்ரேன்ஜ் ஹேஸ் ஹேப்பன்ட்!'
'எஸ்!' என்ற மெசஜோடு ஸ்மைலி ஒன்றும் ஜானிடமிருந்து பதிலாக வந்தது.

இருவரும் ஓடிக் கல்லiறையை அடைகின்றனர்.

கல்லறைக்கு வெளியே ஒரு சின்ன போர்ட்:

'நீங்கள் தேடும் வலைப்பக்கத்தின் பயனர் வேறு பக்கத்திற்கு மாறிவிட்டார்.

மேலும் தகவல்களுக்கு

www.risen.god.info

என்ற வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

கல்லறைக்கு உள்ளே பேதுரு எட்டிப்பார்க்கிறார்.

என்ன ஆச்சர்யம்.

இயேசுவோடு குகையில் வைத்துப் பூட்டப்பட்ட ஐஃபோனும், ஐபேடும் கூட அங்கு இல்லை. சார்ஜர் மட்டும் சுற்றி தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜானின் ஐஃபோன் சிக்ஸ் சிணுங்கியது.

ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன்:

'மேரி மேக்டலின் ஹேஸ் ஆடட் எ நியூ ஸ்டேடஸ்!'

வேகமாகத் திறக்கின்றார்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்!' என்ற தலைப்பில் புதிய ஸ்டேடஸ். தோட்டத்தில் வெளியே நின்றிருந்தாராம். தோட்டக்காரர் என நினைத்து இயேசுவைப் பற்றி ஒருவரிடம் கேட்டாராம். பின் அவரே, 'மரியாள்!' என்றாராம். இவர் 'ரபூனி!' என்றாராம்...

பெண்களுக்குரிய பானியில் வளவளவென்று இருந்ததால் வேகமாக இறுதி லைனுக்கு ஸ்க்ரால் செய்தார் ஜான்.

இறுதியில் இயேசுவோடு மேரி மேக்டலின் தோட்டத்தில் எடுத்த செல்ஃபி ஒன்றும் இருந்தது.

செல்ஃபியை பேதுருவிடம் காட்டுகின்றார் ஜான்.

என்ன நடக்குது? என்று புரியாமல் குழம்பி நிற்கின்றனர் பேதுருவும், ஜானும்.

'உடனடியாக எல்லாருக்கும் இதை க்ரூப்பில் ஷேர் செய்வோம்!'

க்ரூப்பைத் திறந்தால் 12 பேரில் இப்போது வெறும் தோமையார் மட்டும் தான் க்ரூப்பில் இருந்தார். யூதாசு செவ்வாய்க்கிழமையே அன்க்ரூப் செய்து கொண்டார். மற்றவர்கள் வியாழன், வெள்ளி, சனி என எல்லாம் கழன்றுவிட்டனர்.

'மேக்டலின் மரியாளின் ஃபேஸ்புக் பார்!'
என டெக்ஸ்ட் செய்கிறார் ஜான்.

தோமையாருக்கு அனுப்பிய சில நொடிகளில் பதிலும் வந்தது:
'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்!'

மாலை நேரம் இயேசுவும், தன் சீடர்களுக்குத் தோன்றி அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.

'நாங்களும் ஆண்டவரைக் கண்டோம்!' என ஆண்டவருடன் எடுத்த செல்ஃபியை மறுபடியும் தோமையாருக்கு அனுப்புகிறார் ஜான்.

'என் ஆண்டவரே! என் தேவனே!' என க்ரூப்பில் பதில் அனுப்புகிறார் தோமா.

'நீ செல்ஃபியைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்!' - இயேசுவும் பதில் அனுப்புகிறார்.

'கேதர் அட் மவுண்ட். ஐ ஹேவ் டு டேக் ஆஃப் டு மை ஃபாதர்!' - கூடவே எல்லாருக்கும் ஒரு மெசஜ்.
மவுண்ட்டில் சீடர்கள் கூட்டம். இயேசு அவர்கள் நடுவில் நிற்கின்றார்.

'நீங்கள் போய் எல்லாரையும் நம் க்ரூப்பில் சேருங்கள்.
ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என திருமுழுக்கு கொடுங்கள்.
இதோ நான் எந்நேரமும் உங்கள் க்ரூப்பில் இருக்கிறேன்!'

எல்லோரும் க்ளிக் செய்து கொண்டிருக்க அவர்களின் பார்வையிலிருந்து மறைந்துவிடுகின்றார் இயேசு.


1 comment:

  1. மண்டைக் காஞ்சுபோச்சு இன்றைய வலைப்பதிவைப் படித்துமுடிப்பதற்குள்.இந்த நவீனயுகத்தின் gadgets பற்றியும், இன்றைக்குள்ள நவீன modes of communication பற்றியும் தங்களுக்குள்ள அறிவுக்கு ஒரு சபாஷ்! ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதுவல்ல.ஒரு சாமானியனுக்கும் தேவையான விவிலிய அறிவும்,அந்த அறிவை நடைமுறைப்படுத்துவது பற்றியும்தான்.அதென்ன இடைச்செருகல்? " பெண்களுக்குரிய பாணியில் வளவளவென்று" என்று? அதுவும் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அவர் ஒரு பெண்ணைத்தான் தேர்ந்தெடுத்தார் தன்னை வெளிப்படுத்த என்று சொல்ல வரும் பிண்ணனியில்? இருந்தாலும் தங்களது புது யுத்தியைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். சபாஷ்!

    ReplyDelete